இடுகைகள்

மாயமீட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாய்நாடு திரும்பி அதனோடு பொருந்திக்கொள்ள முடியாமல் தவிப்பவர்களின் வாழ்க்கை!

படம்
    மாயமீட்சி மிலன் குந்தேரா காலச்சுவடு செக் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பிழைத்தவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்பி அங்கு வாழமுடியாமல் சூழலுக்கு பொருந்தமுடியாமல் தவிக்கிறார்கள். இதுபற்றிய அனுபவங்களை விவரிக்கிறது மாய மீட்சி நாவல். இரினா, செக் நாட்டைச் சேர்ந்தவள். அவளுக்கு மார்ட்டின் என்பவருடன் அம்மா ஏற்பாட்டின்படி திருமணமாகிறது. திருமணமோ, மணமகனோ இரினாவின் தேர்வல்ல. முழுக்க அம்மாவின் தேர்வு. பிறகு உள்நாட்டில் பொதுவுடமை கட்சி ஆட்சிக்கு வருகிறது. இதனால் இரினாவின் கணவர் மீது ரகசிய போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அங்கு நிலைமை ஒன்றுதான். ஒன்று, பொதுவுடமை கட்சியில் உறுப்பினராக சொத்துகளை அரசின் வசம் ஒப்படைத்துவிட்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வது. அல்லது கட்சியை எதிர்த்து பேசி அரசை விமர்சித்து சிறைப்படுவது. மார்ட்டின் மூன்றாவதாக நாட்டை   விட்டு வெளியேற முயல்கிறார். அவருடன் இரினாவும் செல்கிறாள்.   பிரான்சில் சென்று வாழும்போது, இரினா அந்த நாட்டு வாழ்க்கைக்கு பழகுகிறாள். பிரெஞ்சு சரளமாக பேச பயில்கிறாள். ஆங்கிலம் அவளுக்கு கடினமாகவே இருக்கிறது. இதற்கிடையில் அவளது கணவன் மார்ட்டின