இடுகைகள்

சென்னை சீக்ரெட்ஸ்! - தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சென்னையின் முதல் மருத்துவமனை எப்போது தொடங்கியது?..

படம்
சென்னை சீக்ரெட்ஸ் ! - பிகே முதல் மருத்துவமனை! கோட்டை மருத்துவமனையின் முதல் சர்ஜன் ஜான் கிளார்க் . மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிடலான இங்கு எட்டு முதல் பத்து ராணுவ வீரர்கள் தங்கி சிகிச்சை பெறும் வசதி இருந்தது. 1680ல் கோட்டையில் புனித மேரி சர்ச் கட்டப்பட்டதும் மருத்துவமனையை விரிவுபடுத்த பேசி , 838 பகோடாகள் ( ரூ .3,000) நிதி திரட்டி சர்ச் அருகேயே இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது . கோட்டைக்குள் ஆட்கள் பெருக இடத்தேவையும் அதிகரித்தது. மருத்துவமனையின் கட்டுமானத் தொகையைத் திருப்பி தந்து கம்பெனியே அக்கட்டிடத்தை வாங்கிக் கொள்ள கோட்டைக்கு உள்ளே ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு மாறியது மருத்துவமனை. புதிய கவர்னராக வந்த சர் எலிஹு யேல் , கோட்டையின் வடபகுதியில் ( நாமக்கல் கவிஞர் மாளிகை ) புதிய மருத்துவமனைக் கட்டிடத்தை கட்டினார் . ஏறத்தாழ 60 ஆண்டுகள் மருத்துவமனை அதேயிடத்தில் செயல்பட்டது. 18 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த போர்களால் கோட்டையில் வீரர்கள் குவிந்ததாலும் , ஆயுதங்களின் சேமிப்பாலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதன்விளைவாக மருத்துவமனைக் கட்டிடம் ராணுவ முகாமாக மாறி

பேக் டூ பேக் சென்னை சீக்ரெட்ஸ்: மெட்ராஸ் உதயம்!

படம்
சென்னை சீக்ரெட்ஸ் ! - பிகே மெட்ராஸ் உதயம் ! ஆங்கிலேயர்களின் தொழிற்சாலை 1639ம் ஆண்டு உருவானது .‘History of the City of Madras’ என்கிற நூலில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் சி.எஸ்.னிவாசாச்சாரி ‘‘ பழவேற்காட்டில் இருந்த டச்சுக்கும் , சாந்தோமில் இருந்த போர்த்துகீசியர்களுக்கும் நடந்த போர்களால் மக்கள் நிம்மதி இழந்தனர் . அதைத் தடுக்க , இப்பகுதியை ஆண்ட தமர்ல வெங்கடாத்ரி நினைத்து , டச்சுப் பகுதிக்கும் , சாந்தோமிற்கும் இடையில் தம் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் கிராமத்தை ( சென்னப்பட்டணம் ) உருவாக்குகிறார். ஆங்கிலேயர்களுக்கு மணல்திட்டு பகுதியைத் தமர்ல வெங்கடாத்ரி அளிக்கும்போது , அப்பகுதி ஒப்பந்தத்தில் மதராசபட்டிணம் என்றுள்ளது. ஆக , மதராசபட்டிணம் , சென்னப்பட்டிணம் என்பது இருவேறு கிராமங்கள் . ஆங்கிலேயர்கள் கோட்டையுடன் , தங்குவதற்கான குடியிருப்பையும் கட்டுகின்றனர். கூடுதலாக , இந்திய பணியாளர்களுக்காக வடக்கே புதிதாக ஒரு நகரும் உருவாகிறது. இந்நகரையும் சென்னப்பட்டிணம் என்றே நம்மவர்கள் அழைத்துள்ளனர். இந்தியர்கள் வாழ்ந்த இடம் சென்னப்பட்டிணம் என்றும் , கோட்டை

பேக் டூ பேக் சென்னை!

படம்
4 சென்னை சீக்ரெட்ஸ் !- பிகே சென்னப்பட்டிணம் உருவானது எப்படி? சாந்ேதாமில் போர்த்துக்கீசியர்கள் இரட்டைக்குழல் துப்பாக்கியாக வணிகத்தையும் மதத்தையும் பரப்பிக் கொண்டிருந்தனர். டச்சுக்காரர்களுடன் இருந்த வணிகப் போட்டியாலும் , ஆங்கிலேயர்களும் எதிர்த்து நின்றதால் சாந்தோமிலிருந்த போர்த்துக்கீசியர்கள் ஆங்கிலேயர்களை ரெட் கார்பெட் வரவேற்பு கொடுத்தனர் . அப்போது துபாஷ் (இருமொழி வல்லுநர்) ஆக இருந்த பெரி திம்மப்பா  பிரான்சிஸ் டேக்கு உதவினார் . அன்று இந்தப் பகுதி முழுவதும் விஜயநகர மன்னரின் தர்மல வெங்காடத்ரி என்பவரின் கீழ் செயல்பட்டு வந்தது. தலைநகரம் வந்தவாசி. அன்று , பூவிருந்தவல்லியின் நாயக்கரான சகோதரர் ஐயப்பா கரையோர பாதுகாப்புக்கு பொறுப்பாளர் . மதராசபட்டிணம் வடக்கே ஆங்கிலேயர் கோட்டை கட்டிக் கொள்ளலாம் என அனுமதித்தது இவர்தான் . ‘our madraspatnam’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக , மதராசபட்டிணம் என்ற ஒரு கிராமம் ஏற்கனவே அங்கே இருந்ததும் அங்கே கோட்டைக் கட்டிக் கொள்ளலாம் என்பதும் தெளிவாகிறது. சென்னப்பட்டிணம் எப்படி வந்தது ? 5 சென்னை சீக்ரெட்ஸ் ! - பிகே

திருவல்லிக்கேணி நதி!

படம்
சென்னை சீக்ரெட்ஸ் ! - பிகே திருவல்லிக்கேணி நதி ! பிரான்சிஸ் டே பார்த்த மெட்ராஸ் மணல்திட்டு கடல் வணிகத்திற்கு தோதற்ற இடம் . உடனே அவர் , ‘ அபாயகரமான கடற்பரப்பு ’ என மசூலிப்பட்டிணத்தில் ஆன்ட்ரூ கோகன் தலைவராக இருந்த தனது கவுன்சிலுக்குத் தகவல் அனுப்பினார். பிறகு , மெட்ராஸ் நிலப்பரப்பே சிறந்தது என முடிவெடுத்தார் . எந்த நதியை மூக்கைப் பிடித்துக் கொண்டு கடக்கிறோமோ அதே கூவம்தான். வணிகத்திற்கும் , கம்பெனியின் பாதுகாப்பிற்கும் கூவம் ஏற்றதென கணித்தார் டே. காரணம் மசூலிப்பட்டிணம் , ஆர்மகான் போன்ற இடங்களிலிருந்த பாதுகாப்பற்ற சூழல் , போட்டிதான் . அன்று வடக்கிலிருந்து எலம்பூர் என்கிற நதியும் மணல்திட்டு வழியே ஓடியது. தற்போது இந்நதி பக்கிங்ஹாம் கால்வாய்வுடன் இணைந்துவிட்டது. கோட்ைடயை நிர்மாணிக்க இவையே காரணம் . கூவத்திற்கு தென்புறம் திருவல்லிக்கேணியும் , அதையொட்டி சாந்தோமும் இருந்தன. அன்றைய கூவத்தை திருவல்லிக்கேணி நதி என்று அழைத்துள்ளனர்.

ஆங்கிலேயரிடம் மாட்டிய சென்னை!

படம்
சென்னை சீக்ரெட்ஸ் ! -பிகே ஆங்கிலேயரிடம் மாட்டிய சென்னை ! ஆங்கிலேயர்களும் , டச்சுக்காரர்களைப் போல இந்தோனேஷியா பக்கமே சென்றனர். தாங்கள் கொண்டு வந்திருந்த துணிகள் , தகரம் , ஈயம் , கண்ணாடி , தட்டுகள் போன்றவற்றை இறக்குமதி செய்துவிட்டு மிளகு உள்ளிட்ட மசாலா ஐட்டங்களையும் நறுமணப் பொருட்களையும் ஏற்றுமதி செய்தனர். அப்போது இந்தியாவின் காலிகோ துணிகளுக்கு கிராக்கி இருப்பது தெரியவர , சூரத் நகருக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தனர். இங்கிலாந்தில் வசதியானவர்கள் சில்க் மற்றும் லினன் துணிகளை அணிந்தனர். ஆனால் , ஏழைகளின் துணி பருத்திதான் . அவை அதிகம் கிடைக்கும் பகுதி தென்னிந்தியா என்பதும் ஆங்கிலேயர்களை இந்தியாவுக்கு வரவழைத்தது . கோரமண்டல் கடற்கரையிலிருந்த மசூலிப்பட்டிணத்தில் கோல்கொண்டா சுல்தானின் ஆதரவுடன் ஆங்கிலேயர்கள் முதன்முதலாக வியாபாரத்தை தொடங்கினர் . போட்டியாளர்களான டச்சுக்காரர்களும் , போர்த்துகீசியர்களும் அருகில் இருக்க , ஆங்கிலேயர்களால் வியாபாரத்தில் டாப்பாக வரமுடியவில்லை . பிறகு , மசூலிப்பட்டிணத்திலிருந்து சற்று உள்ளே தள்ளியிருந்த ‘ ஆர்மகான் ’ என்ற இடத்தில் கம்பெ

மிளகைத் தேடி!

படம்
சென்னை சீக்ரெட்ஸ் !- பிகே மிளகைத் தேடி … ஆகஸ்ட் 22ம் தேதி , ஆண்டுதோறும் சென்னையின் பிறந்த தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் தெரியுமா ? இதேநாளில்தான் 1639ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மதராசப்பட்டிணத்தில் இடம் வாங்கி புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர் . ஆங்கிலேயரின் கடவுள் புனித ஜார்ஜின் கையிலுள்ள சிலுவைச் சின்னமே இங்கிலாந்தின் கொடி .   சரி. ஆங்கிலேயர்கள் எதற்காக இங்கே வந்தனர் ? மிளகுக்காகவும் , பருத்தித் துணிகளுக்காகவும். 15ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வணிகத்தில் மாபெரும் புரட்சி நிகழ்ந்தது . போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டறிய போர்த்துகீசியர்கள் வணிகத்தில் கிடுகிடுவென முன்னேறினர் . இதை அறிந்த டச்சுக்காரர்கள் கிழக்கிந்தியாவுக்குச் செல்ல கப்பல் பூட்டினர் . இந்தியாவில் போர்த்துகீசியர்கள் இருந்ததால் டச்சுக்காரர்கள் இந்தோனேஷியா தீவுக்கூட்டங்களுக்கு நகர்ந்தனர். அங்கிருந்து ஏலக்காய் , சாதிக்காய் , இலங்கம் , மிளகு போன்றவற்றை ஏற்றுமதி செய்து வணிகத்தில் வெற்றிக்கொடி கட்டினர் . ஐரோப்பிய மார்க்கெட்டில் டச்சு வணிகர்கள் மிளகின் விலையை இஷ்டத்திற