திருவல்லிக்கேணி நதி!
சென்னை
சீக்ரெட்ஸ்! - பிகே
திருவல்லிக்கேணி
நதி!
பிரான்சிஸ் டே
பார்த்த மெட்ராஸ் மணல்திட்டு கடல் வணிகத்திற்கு தோதற்ற இடம். உடனே
அவர், ‘அபாயகரமான கடற்பரப்பு’ என
மசூலிப்பட்டிணத்தில் ஆன்ட்ரூ கோகன் தலைவராக இருந்த தனது கவுன்சிலுக்குத் தகவல்
அனுப்பினார். பிறகு, மெட்ராஸ் நிலப்பரப்பே சிறந்தது என முடிவெடுத்தார்.
எந்த நதியை
மூக்கைப் பிடித்துக் கொண்டு கடக்கிறோமோ அதே கூவம்தான். வணிகத்திற்கும், கம்பெனியின்
பாதுகாப்பிற்கும் கூவம் ஏற்றதென கணித்தார் டே. காரணம் மசூலிப்பட்டிணம், ஆர்மகான் போன்ற இடங்களிலிருந்த பாதுகாப்பற்ற சூழல், போட்டிதான்.
அன்று வடக்கிலிருந்து
எலம்பூர் என்கிற நதியும் மணல்திட்டு வழியே ஓடியது. தற்போது இந்நதி பக்கிங்ஹாம்
கால்வாய்வுடன் இணைந்துவிட்டது. கோட்ைடயை நிர்மாணிக்க இவையே காரணம். கூவத்திற்கு
தென்புறம் திருவல்லிக்கேணியும், அதையொட்டி சாந்தோமும்
இருந்தன. அன்றைய கூவத்தை திருவல்லிக்கேணி நதி என்று அழைத்துள்ளனர்.