"மாற்றம் சாத்தியம்தான்" - பிரீத்தி ஹெர்மன் சாதித்தது எப்படி?
மக்களோடு
உழைத்தால் மாற்றம் சாத்தியம்தான்! - ச.அன்பரசு
தன்
பதினெட்டு வயது வரை கம்ப்யூட்டரைத் தொடாத, லைப்ரரி வாசல் மிதிக்காத பெண் இன்று உலகளாவிய தொண்டு நிறுவனத்தின்
இயக்குநராக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் அப்பெண் தமிழ்நாட்டின் கூடலூரைச் சேர்ந்தவர் என்பது
சூப்பர் ஸ்பெஷல். ஐந்து ஆண்டுகளுக்கு
முன்பு சேஞ்ச்.ஆர்க் தன்னார்வ
அமைப்பில் இணைந்த பிரீத்தி ஹெர்மனின் கடின உழைப்பு இன்று அமைப்பின் நிர்வாக இயக்குநராக
அவரை உயர்த்தியுள்ளது.
"சமூகத்தில்
மக்களின் வாழ்வுக்கு தடையாக இருந்த பிரச்னைகளைத் தீர்க்க முயன்றபோது, சில பிரச்னைகளுக்கு மட்டுமே வழி கிடைத்தது. மக்களின் கரங்களை ஒன்றாக கோர்த்துத்தான் தினசரி
வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகளை காணமுடியும் என்ற முடிவுக்கு
வந்தபோதுதான், எனது நண்பர்கள் சேஞ்ச்.ஆர்க் அமைப்பை பரிந்துரைத்தனர்" என்கிறார் 34 வயதாகும் சமூகப்போராளியான பிரீத்தி ஹெர்மன். தன் பதினொரு வயதில் இவர் பார்த்த திரைப்படத்தில்
வல்லுறுவுக்குள்ளான பெண் தன் குடும்ப கௌரவத்திற்காக தற்கொலை செய்துகொள்வதை
பார்த்து பயந்து போனார் பிரீத்தி. "கற்பழிக்கப்பட்டதற்காக
ஏன் இறந்துபோகவேண்டும்?"
என கேட்டவரை கேலி செய்தது வேறு யாரோ அல்ல; அவரது குடும்பமேதான். "நம்புவீர்களோ இல்லையோ அன்றே பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு
எதிராக வேலை செய்வதே லட்சியம் என முடிவெடுத்தேன்" என்கிறார் பிரீத்தி ஹெர்மன். பின் பெங்களூரு படிக்கச் சென்ற பிரீத்தி பழங்குடிகள் மற்றும்
தலித்துகளுக்கு உதவும் தன்னார்வ செயல்களில் ஈடுபட்டார்.
உலகில் 196 நாடுகளில்
வெற்றிகரமாக இயங்கிவரும் Change.org இணையதளத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பென் ராட்ரே, அவரது நண்பர் மார்க் திமாஸ் ஆகிய இருவரும்
இணைந்து நிறுவினர். இத்தளத்தில் முக்கியமான
பிரச்னையைப் பற்றி நீங்கள் பெட்டிஷன் எழுதினால், அதனை பார்வையிடும் மக்கள் மூலம் அப்பிரச்னைக்கு ஆதரவு பெருகி அதனை
அரசு தீர்த்து வைக்கும் என்பதே கான்செப்ட் ஐடியா. ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 4 கோடி மக்களும் இந்தியாவில் 70 லட்சம் மக்களும் இத்தளத்தை பயன்படுத்தி
வருகின்றனர்.
"பிரச்னைளை
எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுபவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் சமூக இயக்கங்களை
ஒருங்கிணைத்து தீர்வுகளை வழங்க முயற்சிக்கிறோம்" என தீபச்சுடராக புன்னகைத்து பேசும் பிரீத்தியின்
சமுதாயப்பணிக்கு மற்றொரு மகுடமாக ஒபாமா பவுண்டேஷனுடன் சேஞ்ச்.ஆர்க் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. உலகம் முழுக்க சமூகப்பணியில் ஈடுபடும் இருபது
பேரில் ஒருவராக பிரீத்தி ஹெர்மன் தேர்வாகியுள்ளது பெரும் கௌரவ அங்கீகாரம். 2012 ஆம் ஆண்டு இந்திய இயக்குநராக பிரீத்தி பணியில் இணைந்தபோது சேஞ்ச்.ஆர்க் தளத்தில் மாதந்தோறும் ஐம்பது பெட்டிஷன்கள்
மட்டுமே வந்தன. பிரீத்தியின்
விழிப்புணர்வு பிரசாரத்தின் வாயிலாக இன்று மாதம் 2 ஆயிரம் பெட்டிஷன்கள் வருவதோடு அவற்றுக்கான தீர்வுகளையும் வேகமாக
வழங்கத்தொடங்கியுள்ளனர்.
தேவையற்ற
சிசேரியன் தொடர்பான சுபர்ணா என்ற பெண்ணுடன் தொடங்கிய பிரசாரம் இந்தியாவில்
பெண்களின் சுகாதாரம், குழந்தை பிறப்பு
தொடர்பான சட்டத் திருத்தத்தையே மாற்ற வைத்திருக்கிறது. "இன்று உலகெங்குமுள்ள மக்கள் எங்களது இணையதளத்தில் குழந்தை பிறப்பு, சூழல் பிரச்னைகள், விலங்கு பாதுகாப்பு, ஊழல் முதல் பாலிவுட்டின் பாலியல் அத்துமீறல்கள் வரை புகார்களை
அளிக்கிறார்கள். மேலும் உள்ளூர்
பிரச்னைகளுக்கான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன" என தீர்க்கமாக பேசுகிறார் பிரீத்தி.
ஜனநாய
தீர்வுகளை வழங்கியதற்கான The French Alsacienne Prize க்காகஇந்திய ஊடகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது
பெண்களில் பிரீத்தி ஹெர்மனும் ஒருவர். மேலும நிதி ஆயோக், ஐ.நா சபை ஆகியோர்
இந்தியாவை மாற்றிய 25 பெண்கள்
பட்டியலிலும் பிரீத்தி இடம்பெற்றுள்ளார். தங்களுடைய சிறப்பான சமூகப்பணிக்காக 2014 ஆம் ஆண்டு சேஞ்ச் இணையதள குழு மந்தன் விருதைப் பெற்றது. இன்று சேஞ்ச் இணையதள உறுப்பினர்களின் எண்ணிக்கை
ஒரு கோடி. "மாற்றம்
என்பது தானாகவே உருவாகாது. மக்களுக்கான நம்
சிந்தனையை செயல்பாடாக்கினால் மட்டுமே மாற்றம் சாத்தியம்" எனும் பிரித்தீ ஹெர்மன் பல்வேறு பெண்கள்
சார்ந்த பிரச்னைகளுக்காக தீவிர ஆர்வம் காட்டி
வருகிறார்.
புரட்சியின்
தொடக்கம்!
பெட்டிஷன் அனுப்ப பிரச்னையின் தலைப்பை முதலில் எழுதி
சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது அமைச்சரின் பெயரைக் குறிப்பிடவேண்டும். அடுத்து பிரச்னை பற்றிய சிறுகுறிப்பை எழுதவேண்டும். அடுத்து அதனை ஃபேஸ்புக் கணக்கு வழியாக சமூக
வலைதளத்தில் பகிர்ந்து பிரச்னைக்கு தீர்வுகளை தேடுவது இத்தளத்தின் வழி.
மாற்றம்
சாத்தியம்!
உலகில் பதினெட்டு நாடுகளில் அலுவலகம் உள்ள சேஞ்ச்.ஆர்க் அமைப்பு(பிப்.8,2007), 196 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. தனது சமூகச்செயல்பாடு வழியாக 27 ஆயிரத்து 294 வெற்றிகளை மக்களை
ஒருங்கிணைத்து பெற்றுள்ளது. இதுவரை பங்கேற்றுள்ள
மக்களின் எண்ணிக்கை 23 கோடியே 91 லட்சத்து
93 ஆயிரத்து 479.