ஸ்விம்மிங்பூலில் கார்!
பிட்ஸ்!
நீச்சல் குளத்தில்
கார்!
அமெரிக்காவின்
புளோரிடாவிலுள்ள ஒகலூசா கவுன்டியைச் சேர்ந்த பெண்மணி காரை பார்க்கிங்கில் நிறுத்தினார். அவசரத்தில்
காரை ஹேண்ட்பிரேக் போட மறந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். திரும்பி
வந்து பார்த்தால், கணவர், குழந்தைகள் உட்கார்ந்திருந்த
கார் உருண்டோடி நீச்சல் குளத்தில் இறங்கி நின்றிருக்கிறது. தற்போது
வெயிலில் காரையும், ஃபேமிலியையும் உலர்த்தி வருகிறார் அவசர அம்மிணி.
ஹார்ன்விராட் ஆட்டோ!
மும்பையைச் சேர்ந்த
ஆட்டோக்காரர் தன் ஆட்டோ முழுக்க ஹாரன்களை அலங்கரித்து ஓட்டியது பலரையும் திரும்பி பார்க்க
வைத்தது.
ஆவாஸ் பவுண்டேஷனின் ஒலிமாசு
விழிப்புணர்வுக்காக இந்தியாகேட்டில் ஹார்ன்விராட் ஆட்டோ பயணம் காவல்துறை ஆதரவோடு
தொடங்கியுள்ளது. மும்பை மக்கள், ஒருமணிநேரத்திற்கு
1.8 கோடிமுறை ஹார்ன்களை ஒலிக்கவிடுகிறார்களாம்.
எழுத்துப்பிழை
எச்சரிக்கை!
ஆஸ்திரேலியாவைச்
சேர்ந்த வெங்கட லஷ்மி என்ற பெண்மணி, மும்பை வந்துவிட்டு திரும்ப பிரிஸ்பேன்
செல்ல விமானம் ஏறினார். லக்கேஜில் செய்த எழுத்துப்பிழை அவரை நானோ
நொடியில் தீவிரவாதியாக்கிவிட்டது. பாம்பே என்பதில் Bomb என்பதை மட்டும் எழுதிவிட ஆஸ்திரேலியா போலீஸ் லஷ்மியின் லக்கேஜை நன்கு சோதித்து
எச்சரித்தபின்னர் அவரை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
குட்டி துரைசிங்கம்!
தெலுங்கானாவிலுள்ள
ரச்சகோண்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குட்டி துரைசிங்கமாக புதிய கமிஷனர் பதவியேற்றார். ஆறுவயசு
துடகெலா இஷான் என்ற சிறுவன்தான் அது. கேன்சர் நோயாளியான சிறுவனின்
கமிஷனர் ஆசையை, மேக் எ விஷ் தொண்டு நிறுவனத்தின் மூலம் அறிந்து
நிறைவேற்றியதோடு, 10 ஆயிரம் ரூபாயையும் சிகிச்சைக்கு வழங்கியுள்ளார்
கமிஷனர் மகேஷ் முரளிதர் பகவத்.