கருப்பினத்தவர்களுக்கான ஸ்பெஷல் செய்தி நிறுவனம்!
கருப்பு செய்திகள்!
"எங்கள்
எதிர்காலம் சிறப்பாக உள்ளது" என கூகுள் ஹேங்அவுட் வழியாக
பேசும் மோர்கன் டிபான் கருப்பினத்தவர்களுக்கான செய்தி தளங்களை(Blavity) உருவாக்கி இயங்கி வருகிறார். செயின் லூயிஸ் நகரில் பிறந்தவரான
மோர்கனுக்கு முகமது அலி, மார்ட்டின் லூதர் கிங் ஜூர் ஆகியோரே
முன்னோடிகள். மாதம் 30 லட்சம் பேர் மோர்கனின்
இணையதளங்களை வாசித்து வருகின்றனர்.
இத்தளத்தில் வெளியாகும் 40 சதவிகித
செய்திகள் தன்னார்வலர்கள் உழைப்பில் உருவாகிறது. பிளாக் வடிவில்
பிஸினஸ் மாடலாக பிளாவிட்டி உருவாகியுள்ளது. "நாங்கள் பிற
முன்னணி வணிக மாடல்களைப் போல செயல்பட விரும்பவில்லை. நாங்கள்
இத்துறையில் பத்து ஆண்டுகளாக உழைத்து வருகிறோம்" என்கிறார்
மோர்கன் டிபான். செஸ், ஹாக்கி என பல்வேறு
விளையாட்டுகளில் பங்கேற்றவர், சிலிக்கன்வேலியில் தொழில்நுட்ப
வல்லுநராக பணியாற்றினார். போலீஸ், மைக்கேல்
ப்ரௌன் என்பவரை சுட்டுக்கொன்றபின் பிளாவிட்டி நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து மோர்கன்
தொடங்கினார். "தன்னார்வலர்கள் மூலம் கிடைக்கும் செய்திகள்
வெரைட்டியாக இருப்பதோடு, அவர்கள் மனதின் குரலையும் வெளிப்படுத்துகிறது."
என்கிறார் மோர்கன்.