வெனிசுலாவின் மெண்டோஸா!
வெனிசுலாவின் மெண்டோஸா
லத்தீன் அமெரிக்காவைச்
சேர்ந்த லாரன்ஸோ மெண்டோஸா எம்பிரசெஸ் போலார் எனும் உணவு நிறுவனத்தின் அதிபர். 1.5 பில்லியன்
டாலர்கள் சொத்துக்கு அதிபதி. வெனிசுலோ அதிபர் நிக்கோலஸ் மதுரோ
செய்யாததை மக்களுக்கு செய்கிறார் மெண்டோஸா. ஆம், வயிற்றுக்கு
சோறிடுகிறார். 2016 ஆம் ஆண்டிலேயே 73 சதவிகித
மக்களின் எடை சராசரியாக 19 பவுண்டுகள் குறைந்திருக்கிறது என அறிக்கை
வெளியானது. வெனிசுலாவின் பொருளாதாரமே கச்சா எண்ணெய் சார்ந்தது.
முன்னாள் அதிபரான
ஹியூகோ சாவேஸின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கச்சா எண்ணெய் லாபத்திலேயே உருவானது. மதுரோ
அதிபரான ஓராண்டிலேயே எண்ணெய் விலை வீழ்ச்சியடைய, பொருளாதாரம்
சரிந்தது. கொலைகளின் அளவு 25-91%(1991-2016) உயர்ந்தது.
கடும் உணவுத்தட்டுப்பாட்டிலும் arepas(ஸ்லைஸ் பிரட்) எனும் உணவை கடையில் கிடைக்கச்செய்தது மெண்டோஸாவின்
சாதுரியம். அரசின் நெருக்கடிகளையும் கடந்து உணவுக்கான
மூலப்பொருட்களை இறக்குமதி செய்தார். 1941 ஆம் ஆண்டு
மென்டோஸாவின் தாத்தா மதுபான கம்பெனியைத் தொடங்கினார். 1962 ஆம்
ஆண்டு, சமைத்த சோள உணவுக்கு(arepas) பேடன்ட்
வாங்கினார். வணிகமேலாண்மை படித்து கம்பெனியின் இயக்குநராக மெண்டோஸா
பதவியேற்ற ஆண்டுதான் சாவேஸ் வெனிசுலா அதிபராக, பிரச்னையும் தொடங்கியது.