ஆப்பிள் நகர்!
ஆப்பிள்
நகர்!
அமெரிக்காவின் நியூயார்க்கை பிக் ஆப்பிள் என செல்லமாக
குறிப்பிடுகின்றனர். உறங்கா நகரம், கோதம் என வேறு சில பெயர்களும் உண்டு என்றாலும் பிக் ஆப்பிள் என்ற பெயருக்குள்ள
வசீகரம் இன்றும் குறையாதுள்ளது. 1920 ஆம் ஆண்டு தி மார்னிங் டெலிகிராப்
பத்திரிகையில் விளையாட்டு பத்தி எழுத்தாளர் ஜான் ஜே ஃபிட்ஸ்ஜெரால்ட் குதிரை பந்தய விளையாட்டைக்
குறிப்பிடும்போது நியூயார்க் நகரை பிக் ஆப்பிள் என குறிப்பிட்டு எழுதி பிரபலப்படுத்தினார்.
1924 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று மீண்டும் தன் பத்தியில் நியூயார்க்கை ஆப்பிள் என குறிப்பிட்டு எழுதினார்.
அப்போது குதிரைப்பந்தயங்களுக்கான பணப்பரிசுகள் பெரும் தொகையாக உயர்ந்துவிட்டதை
குறிப்பிட்ட இந்த வார்த்தையை ஜான் பயன்படுத்தினார். பின் கிடைக்கும்
வாய்ப்புகளிலெல்லாம் இந்த வார்த்தை ஜான் அடித்துவிட சமூகத்தில் மறக்கமுடியாத ஒன்றாக
மாறியது. பின் இரவு கிளப்புகளில் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும்
1930 ஆம் ஆண்டு ஜாஸ் இசைக்குழுக்களிலும் ஆப்பிள் வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
நகரமேயர் அறிவிப்பினால் பத்திரிகையாளர் ஜான் வாழ்ந்த 54 ஆவது தெரு(1934-63) பிக் ஆப்பிள் சென்டர் என பெயர் மாற்றி
அழைக்க தொடங்கினர்.