ஊக்கம் தரும் பெண்களின் சுயசரிதை நூல்கள்!



இந்தியாவில் சுயசரிதைப்படங்கள் க்ளஸ்டர் குண்டுகளாக உருவாகி வருகின்றன. இந்நிலையில் ஹாலிவுட்டிலும் கூட பெண்களை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளிவரக்கூடும். பல்லாயிரம் பேரை ஊக்கப்படுத்திய, உற்சாகப்படுத்திய சில பெண்களின் சுயசரிதை நூல்கள் இவை. 



சுயசரிதை நூல்கள்!

Image result for HARRIET TUBMAN



 HARRIET TUBMAN // MOSES OF THE UNDERGROUND RAILROAD

முப்பது ஆண்டுகள் அடிமையாக வாழ்ந்த ஹேரியட் டப்மன் அவ்வாழ்விலிருந்து தப்பி தன் சகோதரிகளை, கணவரைக் காப்பாற்றினார். 1856 ஆம் ஆண்டு ஹேரியட்டின் தலைக்கு 40 ஆயிரம் டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டது. 300 க்கும் மேற்பட்டவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டார் ஹேரியட்.


Image result for AMALIE “EMMY” NOETHER /





 MALIE “EMMY” NOETHER // THE WOMAN EINSTEIN CALLED A "GENIUS"

ஜெர்மன் யூத கணித ஆசிரியையான அமேலி எம்மி நோதரின் வாழ்க்கை கதை. பதினைந்து ஆண்டுகள் காசு வாங்காமல் ஆசிரியையாக பணியாற்றிய நோதர், எர்லாங்கன் பல்கலையில் கற்க அனுமதி பெறவும் சிரமப்பட்டவர். இன்று இயற்கணிதம், இயற்பியல் தியரிகளுக்காக பெருமையுடன் நினைவுகூரப்படுகிறார் அமேலி.

Image result for KITTIE SMITH





KITTIE SMITH // THE ARMLESS DYNAMO
தந்தையினால் கைகளை இழந்த கிட்டி ஸ்மித், கால்களால் எழுத, வரைய, பியானோ வாசிக்க ஏன் மரவேலைகளை செய்து சாதித்த தன்னம்பிக்கை மனிதர். அவரின் வாழ்வை உணர்வும் நெகிழ்ச்சியுமாக இச்சுயசரிதை பேசுகிறது.