பசுமை பேச்சாளர்கள் இறுதிபகுதி!
பசுமை
பேச்சாளர்கள் 55
ச.அன்பரசு
ஆலவ்
கர்ஸ்டாட்
நார்வே
ஆயில் நிறுவனமான ஸ்டேட் ஆயிலில் பணிபுரியும் ஆலவ் கர்ஸ்டாட்,
கார்பன் டை ஆக்சைடு வாயுவை சேமிப்பதில் உலகின் முன்னணி வல்லுநர்களில் ஒருவர்.
மின்நிலையங்களில் வெளியிடப்படும் கார்பனை குழாய் மூலம் சேமித்து அதனை திரவ வடிவாக்கி ஆழ்கடலிலுள்ள பாறைகளில் செலுத்துவது இவரின் திட்டம்.
90 சதவிகித கார்பன் வெளியீட்டை குறைக்கும் இத்திட்டத்திற்கு பல மில்லியன் செலவு என்றாலும சூழல் பாதுகாக்கப்படுவதை முக்கியமாக கருத்தாக இதில் வலியுறுத்துகிறார் ஆலவ் கர்ஸ்டாட்.
கார்மேக் மெக்கார்த்தி
1933 ஆம் ஆண்டு பிறந்த புலிட்சர் பரிசு வென்ற எழுத்தாளர்,
சூழல் குறித்த கவனம் கொண்டுள்ளவர். தன் கதைகளில் வசனங்களுக்கு மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தாமல் எழுதுபவர்,
டைம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களின் பாராட்டுகளை தன் எழுத்திற்காக பெற்றவர்.
பீட்டர் ஹெட்
பசுமைக்
கட்டிடங்களைக் கட்டி வருகிறார்.
பாலங்களைக் கட்டுவதில் வித்தகரான பீட்டர்ஹெட், வெஸ்ட்மின்ஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக உள்ளார்.
டாங்டன் பசுமை நகரை உருவாக்கிய பீட்டர்ஹெட், "சீனா எங்களை பசுமை கோரிக்கைகளுடன் அணுகியபோது நம்பவில்லை.
ஆனால் அவர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்தனர்"
என புன்னகையுடன் பேசுகிறார். உணவு, மின்சாரம் ஆகிவற்றை நகரின் உள்ளேயே உருவாக்கும் தற்சார்பு கொண்ட இந்நகரில் குப்பைகள்
80 சதவிகிதம் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதோடு மின்வாகனங்கள் மட்டுமே போக்குவரத்துக்கு உதவுகின்றன.
நகரை பசுமை தன்மையுடன் அமைக்க பீட்டர்ஹெட் ராக்ஃபெல்லர் பவுண்டேஷனுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.
(நிறைந்தது)
சின்ன பிரேக் தேவை!
பசுமை பேச்சாளர்கள் தொடங்க உறுதுணையாக இருந்தது தி கார்டியன் இணையதளம். இதில் உலகில் பசுமை காப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் மனிதர்கள் குறித்த தொகுப்பு எனக்கு பெரும் உற்சாகமூட்ட, முத்தாரத்தில் பசுமை பேச்சாளர்கள் தொடர் தொடங்கியது. 50 வாரங்களோடு போதும் என நினைத்தாலும் பஞ்சபூதங்களிலும் ஏற்படும் பாதிப்புகளை காக்கும் மனிதர்களை அறிமுகப்படுத்த 5 வாரங்கள் கூடுதலாக எடுத்துக்கொண்டால் தவறில்லை என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டுவிட்டேன். இதுவரை பசுமை பேச்சாளர்கள் தொடர் மட்டுமே லோகோ மாற்றங்களின்றி வெளிவந்திருக்கிறது. உறுதியான அழகான லோகோவை உருவாக்கி அளித்த குங்குமம் தோழி டிசைனர் கதிர்வேல் ஆறுமுகம் அவர்களுக்கு என் நன்றி. தொடரை வாசித்து திருத்தங்களை கூறிய Aum டிசைன்ஸ் மெய்யருள், குங்குமம் புகழ் திலீபன் ஆகியோருக்கும் என் நன்றிகள் கோடி. ஏராளமான நூல்களை வாங்கிக் கொடுத்து வாசிக்க வைக்கும் ஆசிரியர் கே.என்.சிவராமன் இன்றி இம்முயற்சி சாத்தியமில்லை. நன்றி சார்.