முட்டை உடைஞ்சு போச்சு!






Image result for malayalam comedy



பிட்ஸ்!

மிலிட்டரி அப்பா!

சீனாவில் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் மகளை தன் பைக்கில் கயிற்றால் கட்டிவைத்து வாலிபர் அரக்கத்தனமாக பள்ளிக்கு அழைத்து செல்லும் வீடியோ ரிலீசாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.  மகளை கட்டாயப்படுத்தும் மிலிட்டரி வகையறா பைக் வாலிபரை சீனா போலீஸ் கண்டுபிடித்து எச்சரித்துள்ளனர்.

யூட்யூப் பேபி!

அமெரிக்காவின் ஏர்ஃபோர்ஸ் கணினி நிபுணரான தியா ஃப்ரீமேன் யூட்யூப் வீடியோக்களைப் பார்த்தே குழந்தையை பாதுகாப்பாக பிரசவித்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி போகும் விமானத்தில் வலி தொடங்க, இஸ்தான்புல்லில் இறங்கி ஹோட்டல் அறையில் பணியாளர்கள் உதவியுடன் குழந்தையை பெற்றுள்ளார் தியா.

முட்டை வெள்ளம்!

சீனாவில் அண்மையில் முட்டை வெள்ளம் ஏற்பட்டது. ஹேங்சூ-ஜிங்டெஸான் நெடுஞ்சாலையில் டிரைவர் லாரியைக் கொட்டிக்கவிழ்க்க ஒரு லட்சம் முட்டைகள் ஆன் தி ஸ்பாட் சாலையிலேயே ஆபாயிலாயின. நெடுஞ்சாலையில் 120 மீட்டருக்கு உடைந்து கிடந்த முட்டைகளின் மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்.

குருட்டு யானை சவாரி!

ராஜஸ்தானில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் 19 யானைகளுக்கு சரியான பார்வை கிடையாது என அறிக்கை அளித்து பீதி கிளப்பியுள்ளது அரசு விலங்குநல வாரியம். பார்வையிழப்பு, காசநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட யானைகளை அமெர் துறைமுகத்தை பார்வையிடவரும் டூரிஸ்ட்களுக்கு அரசு அளித்து வருகிறது என கூறுகிறது பீட்டா அமைப்பு.