வெறுப்பு அரசியல் பேச்சில் முந்துவது யார்? - இந்தியாஸ்பெண்ட் ஆய்வு

Image result for hate speech


வெறுப்பு அரசியல் ஏன்?

இந்தியாவில் ஆட்சி, அதிகாரத்தைப் பெற இனவெறுப்பைத் தூண்டும் வகையில் பல்வேறு எம்பி, எம்எல்ஏக்கள் பேசிவருகின்றனர். இதில் பாஜக, தேர்தலில் பெறும் வெற்றியைப் போலவே 47% சதவிகிதம் பெற்று முன்னிலை வகிக்கிறது என தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது.


பாஜகவைத் தொடர்ந்து அனைத்திந்திய மஜ்லிஸ் இட்டெஹடுல் முஸ்லிமீன்(AIMIM), தெலுங்கானா ராஷ்டிர சமிதி உட்பட ஆறுகட்சிகள் வெறுப்பு சொற்பொழிவுகளில் முன்னிலை வகிக்கின்றன. இதில் உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெறுப்பு பேச்சுகள் அதிகம் பேசப்பட்டுள்ளன. பாஜக, சிவசேனா, பாமக, ஏஐயுடிஎஃப், டிஆர்எஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பதினைந்து உறுப்பினர்கள் மீது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பத்து பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 43 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறுப்பு பேச்சுக்களை பேசியதாக 198 அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது