இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைகிறதா?




Image result for employment crisis in india



வேலைவாய்ப்பு எங்கே?

இந்தியாவில் ஆண்டுதோறும் எட்டு மில்லியன் வேலைவாய்ப்புகளுக்கான தேவை உருவாகிவருவதாக உலகவங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில்(ஏப்.15) கூறியுள்ளது.  2005-2015 ஆம் ஆண்டுவரை ஆண்களின் வேலைவாய்ப்பில் சிறியளவு வேறுபாடு என்றாலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 5% குறைந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் பதினைந்து வயதிற்கு மேற்பட்ட வேலைசெய்பவர்களின் அளவு 2025 ஆம் ஆண்டு தற்போதைய அளவான 8-41 சதவிகிதமாக அதிகரிக்கவிருக்கிறது. "தெற்கு ஆசியாவில் மாதம்தோறும் 1.8 மில்லியன் இளைஞர்கள் வேலை செய்வதற்கான வயதை எட்டிவருகிறார்கள்" என்கிறார் உலகவங்கியின் தெற்காசிய பொருளாதார வல்லுநரான மார்ட்டின் ராமா. 2017 ஆம் ஆண்டு 18.3  மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 18.9 ஆக உயரவிருக்கிறது என எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது உலக தொழிலாளர் இயக்கத்தின் அறிக்கை. இந்தியப்பிரதமர் வேலைவாய்ப்பின்மையை மறுத்தாலும் குறிப்பிட்ட வேலைக்கு அதனையும் மீறிய கல்வித்தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிப்பது வேலைவாய்ப்பு மார்க்கெட்டின் போட்டியை யதார்த்த சாட்சியாக உலகிற்கு சொல்கிறது.