சூழல் கணிப்பாளர்!
சூழல் கணிப்பாளர்!
தென் ஆப்பிரிக்காவில்
தண்ணீரை அரசு ரேஷன் முறையில் விநியோகிக்கத் தொடங்கியதை முன்கூட்டியே கணித்தவர் கொலம்பியா
சூழலியல் கழகத்தின் இயக்குநரான லிசா கோடார்ட். மாலி, பர்கினா
ஃபாஸோ, நைகர் ஆகிய பகுதியிலிருந்த மக்கள் நீர்தட்டுப்பாட்டால்
இடம்பெயர்ந்து வருகின்றனர். "முந்தைய ஆண்டுகளைவிட இப்பகுதிகளில்
வெப்பநிலையின் தன்மை மாறியுள்ளது. கடல் வெப்பநிலையும் மெல்ல மாறிவருகிறது
" என்கிறார் லிசா.
பல்வேறு இயற்கை
பேரழிவுகளை கணிப்பதற்கான கட்டமைப்புகளை நிறுவுவதற்காக பல்வேறு நாடுகளில் பல்வேறு அரசு
மற்றும் தன்னார்வ அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்துள்ளார் லிசா. அன்டார்டிகாவில்
பனிக்கட்டிகள் உருகுவதைப் பற்றி கவலைப்படாமல் எல் நினோ, லா நினோ
பற்றி லிசா ஆய்வுகள் செய்வதை பிற ஆய்வு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் விமர்சிக்கின்றனர்.
"சிறந்த ஆராய்ச்சி மாடல்களிலும் குறைகள் உண்டு. நாங்கள் ஆராய்ச்சி செய்யும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு ஆராய்ச்சியின் முடிவுகள்
உதவுகின்றன." என்கிறார் லிசா.