புத்தகம் புதுசு!




Image result for books


புத்தகம் புதுசு!

Ghost Boys
by Jewell Parker Rhodes
192pp
Little, Brown Books

தன் பொம்மைத்துப்பாக்கியால் போலீஸ் மூலம் சுடப்பட்டு அநியாயமாக ஆவியாகிறான் பனிரெண்டு வயசு ஜெரோம். அப்போது தன்னைப் போன்ற சூழலில் இறந்த எம்மெட் டில் என்ற சிறுவனை சந்திக்கிறான் ஜெரோம். இருவரின் வாழ்வு வழியாக அமெரிக்காவில் நிலவிவரும் இனவெறி அவலத்தை விவரிக்கிறார் ஆசிரியர்.



The Stone Girl's Story
by Sarah Beth Durst
336pp
Clarion


மலையில் வாழும் சிற்பி, தன் அபூர்வ திறமையால் பாறைகளை விலங்குகளாக வடித்து ஸ்பெஷல் திறமையால் அதற்கு உயிரும் கொடுக்கிறார். அதில் மாய்கா எனும் பனிரெண்டு வயது சிறுமியும் அடக்கம். திடீரென சிற்பி இறந்துபோக, பாறைகளின் உடலிலுள்ள வடிவங்களும் காலப்போக்கில் மறைய, உயிருடன் உலாவிய விலங்குகள் இறக்கின்றன. தங்களை மரணத்திலிருநது காக்கும் சிற்பி தேடி சிறுமி மாய்கா செல்லும் பயணமே கதை.