மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி விலங்குகளால் நிறங்களை இனம்பிரித்து அறிய முடியுமா? ஊர்வன, பறவைகளுக்கு நிறங்களை இனப்பிரித்து அறியும் திறன் உண்டு. ஆனால் பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறங்களை அறியும் திறன் இல்லை. மனிதகுரங்கு, குரங்கு ஆகியவை நிறங்களை அறியக்கூடியவை. நாய்கள், நீலம், பழுப்பு ஆகியவற்றின் அடர்த்தியை அறிந்துகொள்ளும். பூனை, பச்சை மற்றும் நீல நிறத்தை அறிகின்றன. அனைத்து விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருக்குமா? முதுகெலும்பு கொண்ட விலங்குகளுக்கு பெரும்பாலும் ரத்தம் சிவப்பாக இருக்கும். பிராண வாயுவில் ஆக்சிஜனை அடிப்படையாக கொண்டு ரத்த நிறம் அமைகிறது. ஹீமோகுளோபின் அணுவில் இரும்பு உள்ளது. இதுவே சிவப்பு நிறத்திற்கு காரணம். ஹெமோசயானின் இருந்தால் ரத்தம் நீலமாகவும், குளோரோகுரோனின், ஹெமெரித்ரின் இருந்தால் பச்சை நிறமாகவும் இருக்கும். மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? நாய், பூனை, பசு, காளை, ஆடு, யானை, ஒட்டகம், சிங்கம், சிறுத்தை, புலி, கொரில்லா, சிம்பன்சி, குதிரை, வரிக்குதிரை என பல்வேறு விலங்களுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. ஜெல்லி மீன்களில் மனிதர்களைக் கொல்லு...