இடுகைகள்

லீனா நாயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும்! - லீனா நாயர்!

படம்
  லீனா நாயர் leena nair by alana semules பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர் லீனா நாயர். அந்த நம்பிக்கையில்தான் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு வருகிறார். ஆறு ஆண்டுகள் யுனிலீவரில் வேலை செய்தார். தற்போது சேனல் என்ற பேஷன் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இவர் பொறுப்புக்கு வந்தபிறகு, நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள உள்ள பெண் தலைவர்களின் எண்ணிக்கை அறுபது சதவீதமாக அதிகரித்துள்ளது.  நமக்கு பின்னே ஆற்றல் வாய்ந்த தலைவர் பின்னே உள்ளார் என்பதை அறியவேண்டிய காலம் இது. நாங்கள் கலந்துரையாடலின்போது, தங்கள் கருத்துகளை கூற வரும் அனைவரையும் கவனித்து அவர்களின் குரல்களையும் கேட்கிறோம் என்றார் லீனா நாயர். சானல் நிறுவனத்தின் அறக்கட்டளை ஃபாண்டேஷன் சானல் அமைப்புக்கு கொடுக்கும் நிதி கூடுதலாகியுள்ளது. இருபது மில்லியன் டாலர்களிலிருந்து நூறு மில்லியன் என நன்கொடை நிதி அதிகரித்துள்ளது. இந்த நிதியை வைத்து திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள், மாங்குரோவ் காடுகளை வளர்க்கும் பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகள் ஆகியோருக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறார்கள்.  சா

நிறுவனங்களின் இயக்குநர்களாக இந்தியர்கள் நியமிக்கப்பட என்ன காரணம்?

படம்
  pixabay சாதிக்கும் இந்திய இயக்குநர்கள்! அண்மையில் இந்தியரான லீனா நாயர், சானல் பிரெஞ்சு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக பதவியேற்றார். இதன் மூலம், பெப்சிகோவின் இயக்குநராக இருந்த இந்திரா நூயிக்கு அடுத்ததாக பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.  இந்தியர்கள் இப்போது பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இயக்குநராக மாறிவருகிறார்கள். மைக்ரோசாஃப்டின்  சத்யா நாதெள்ளா, ஆல்பபெட்டின்  சுந்தர் பிச்சை ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். ஐபிஎம், நோவர்டிஸ், அடோப், ட்விட்டர், ஹார்மன், விமியோ ஆகிய நிறுவனங்களிலும் இந்தியர்கள் இயக்குநர்களாக உள்ளனர். ”பிறப்பு, கல்வி, வேலை என அனைத்து விஷயங்களுக்கும் இந்தியர்கள் போராடி வளர்வதால் இயற்கையாகவே அவர்கள் சிறந்த மேலாளர்களாக இருக்கிறார்கள்” என்றார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆர்.கோபாலகிருஷ்ணன். பியூ நிறுவன ஆய்வுப்படி(2016படி), 77 சதவீத இந்தியர்கள் குறைந்தப்பட்சம் ஒரு பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர் என கண்டறிந்தது. இந்த வகையில் 31 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே பட்டம் பெற்றவர்கள். ”தொழிலை நடத்திச் செல்ல புதுமைத்