இடுகைகள்

அபராதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

14. வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் திட்டமிட்ட மோசடி - மோசடி மன்னன் அதானி

படம்
  அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கணக்கு தணிக்கைகளை டெலோய்ட் அல்லது எர்னஸ்ட் அண்ட் யங் ஆகிய கணக்கு தணிக்கை நிறுவனங்கள் பார்த்து ஒப்புதல் அளித்துள்ளன. Adani Power limited SRBC & Co LLP Adani Ports & SEZ Limited Deloitte Haskins & Sells LLP Adani Transmission Limited Deloitte Haskins & Sells LLP Adani Green energy limited Joint Auditors SRBC & Co LLP and Dharmesh parikh & Co LLP   இந்த நிறுவனங்கள் ஒப்புதல் அளித்த கணக்கு தணிக்கை விவகாரங்களிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. 2022ஆம் ஆண்டு அதானி பவர் நிறுவனத்தின் கணக்கு இதற்கு உதாரணம். எஸ்ஆர்பிசி என்ற நிறுவனம் கணக்கு தணிக்கை செய்து ஒப்புதல் அளித்துள்ளது. ‘தகுதி பெற்றிருக்கிற நிறுவனம்’ என்று கூற முடிந்ததே தவிர நேரடியான அல்லது தகுதி இல்லை என்ற கருத்தை அளிக்க முடியவில்லை. (ப.206) ‘’பொருட்கள் சார்ந்த பலவீனம் நிறுவனத்தின் உள்ளே நிதி சார்ந்த ஆவணங்களில் காணப்படுகிறது. நிறுவனத்தின் நிதிநிலையைக் கூறுவதிலு

தேசதுரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா, மாற்றப்பட வேண்டுமா? 124 A IPC

படம்
  ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்குவதற்காக தேச துரோக சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நாடு முழுக்க ஆங்கிலேயருக்கு எதிராக பேசிய, செயல்பட்ட, கலை வடிவங்களை உருவாக்கியவர்கள் சிறையில் பாரபட்சமின்றி அடைக்கப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர்.  124ஏ ஐபிசி என்ற சட்டம்தான் இன்று இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்படும் சட்டம். இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டி, கார்ட்டூன், சமூக வலைத்தள பதிவுகள், அனுமன் ஜெயந்திக்கான கூச்சல்கள் என எவற்றையும் தேச துரோக சட்டம் விட்டுவைக்கவில்லை. அதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  தேசதுரோகம் என்றால் என்ன? அரசுக்கு எதிரான பேச்சு, செயல்பாடு மற்றும் மக்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சிக்கு தூண்டுதல் என்பதை தேசதுரோகம் என ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கூறுகிறது.  வெறுப்பு, கண்டனம், விருப்பமின்மை ஆகியவற்றை வார்த்தை, செயல்பாடு மற்றும வேறெந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது தேச துரோகம் என இந்திய சட்டம் 124 ஏ கூறுகிறது.  வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது தேச துரோகத்தில் உள்ளடங்கியது. அரசை விமர்சிப்பது இதில் சேராது என 1962ஆம் ஆண்டு ஐ

உலகையே கட்டுப்படுத்தும் டெக் நிறுவனமாக கூகுள் வளர்ந்த கதை! சூப்பர் பிஸினஸ்மேன் - லாரி பேஜ், செர்ஜி பிரின்

படம்
      சூப்பர் பிஸினஸ்மேன் கூகுள் இரட்டையர்கள் செர்ஜி பிரின், பேஜ் பில்கேட்ஸின் மைக்ரோசாப்டைப் போன்ற ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக கூகுள் மாறிவிட்டது அதைப் பற்றியும் அதனை தொடங்கிய கூகுள் இரட்டையர்கள் பற்றி கட்டுரைகள் செய்தி வெளிவராத நாளிதழ்களோ, வார இதழ்களோ இருக்க முடியாது. அந்தளவு சர்ச் எஞ்சின் ஒன்றை உருவாக்கி மக்களை எளிதாக அதில் இணைத்துவிட்டனர். இப்போதும் சமூக வலைத்தள விஷயத்தில் நினைத்த வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஆண்ட்ராய்டு விஷயத்தில் மக்களை கட்டுப்படுத்தி தான் வருகிறார்கள்.  வெற்றி பெற்ற பெரு நிறுவனம் என்றாலும் கூட பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வருவதோடு, வன்பொருட்கள், மென்பொருட்கள் என பலவற்றையும் உருவாக்கி வருகின்றனர். 2004இல் கூகுளின் நிறுவனர்களான செர் ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோரைப் பற்றி கட்டுரை பிளேபாய் இதழில் வெளியானது.  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்று வரும் நிறுவனர்களின் திறமையை வெளிப்படையாக பாரட்டி வெளியான கட்டுரை அது. பேஜ், அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்தவர். பிறகு ஸ்டான்போர்டில் பிஹெச்டி படிக்க  முடிவெடுத்து சேர்ந்தார். பிரின் ரஷ்யாவில் பிறந்தவர். இவரது பெற்றோர்

தவறுகளை தட்டிக்கேட்போம்! -ரான்பாக்சி முதல் இன்போசிஸ் வரை

படம்
இன்போசிஸ் நிறுவனம் அண்மையில் தவறான வணிக நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. இக்குற்றச்சாட்டை முனவைத்தவர் பற்றி பலரும் மறந்திருப்பார்கள். இவர்கள் மீதும் இவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மீண்டிருப்பதோடு பல்வேறு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை இவர்கள் வெளிக்கொண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது பங்குச்சந்தையை முறைப்படுத்தும் செபி, நிறுவனங்களின் தவறான நடவடிக்கையைத் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிலான பரிசை வழங்குகிறது. தவறுகளை வெளிப்படுத்துவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அவர்களின் புகைப்படம், முகவரி ஆகியற்றை ரகசியமாக பாதுகாக்கின்றனர். 2014ஆம் ஆண்டு இதுபோல தவறுகளை கண்டுபிடித்து கூறுகிறவர்களை பாதுகாக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. நிறுவனங்களின் விதிமீறல்களை அரசுக்கு சொல்வது, அமெரிக்காவில் பராக் ஒபாமாவின் ஆட்சியில் 2008ஆம்ஆண்டுதான் தொடங்கியது.அப்போது பொருளாதார சிக்கல்கள் தொடங்கியிருந்தன. எனவே பங்குச்சந்தையைக் காப்பாற்றவே அரசு, வ

ஃபேஸ்புக்கின் லிப்ரா புகழ்பெறுமா? - புதிய கிரிப்டோகரன்சி!

படம்
லிப்ரா கிரிப்டோ கரன்சி மக்களை ஈர்க்குமா?  சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், லிப்ரா எனும் புதிய கிரிப்ட்டோ கரன்சியை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.  நவீன உலகில் அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இணையத்தையே நம்பியுள்ளன. இதில் மக்கள் செய்யும் பணப்பரிமாற்றமும் கூட பல்வேறு வகையில் பாதுகாப்பானதாகவும் நவீனமாகவும் மாறிவருகிறது. இணையத்தில் கட்டற்ற வணிகம் செய்வதற்காக உருவானதுதான் கிரிப்டோகரன்சி. இதிலுள்ள பலமும் பலவீனமும் இதனை அரசும், மத்திய வங்கிகளும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான். பிளாக்செயின் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிரிப்டோகரன்சிகள் இயங்கிவருகின்றன. இந்தியாவில் வணிகத்திற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. இதனால், கிரிப்டோகரன்சிகளின் புழக்கம் குறையவெல்லாம் இல்லை. சட்டத்திற்கு புறம்பாகவும் பிட்காயின் கரன்சிகள், இணையம் வழியாக வணிகத்தில் புழங்கி வருகின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் லிப்ரா கரன்சி, கட்டற்றதல்ல. இதனை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள தன்னார்வ அமைப்பு கட்டுப்படுத்துகிறது. உலகெங்கும் உள்ள லிப்ரா அசோச

தடுப்பூசி போடாவிட்டால் அபராதம்!

படம்
அம்மை தடுப்பூசியை எதிர்க்கும் அமைப்பின் பிரசாரம், வலதுசாரிகளின் அதிகார பலம் ஆகியவை மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. இதன் பாதிப்பாகத்தான் மும்பை டெல்லியில் மாணவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்று கூறிய முஸ்லீம் பள்ளிகளைப் பற்றி முன்னர் பேசியிருந்தோம். அதேசமயம் அப்படி போட பெற்றோர் விரும்பாத போதும் அரசு நினைத்தால் அதை கட்டாயமாக்க முடியும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு. அண்மையில் தடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபாராதம் விதிக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அபராதமாக 2500 யூரோக்களை விதித்துள்ளார். எங்களது நோக்கம் அபராத தொகையைப் பெறுவதல்ல. தடுப்பூசியை குழந்தைகளுக்கு சரியான நோக்கில் வழங்குவதே என்று கூறியுள்ளார். தொடக்க பள்ளியில் ஆறு வயதான குழந்தைகளுக்கு பெற்றோர் தடுப்பூசி போடாவிட்டால் அவர்களுக்கு ஜெர்மனி அரசு இனி அபராதம் விதிக்கும்.  எப்போதும் விவாதித்துக்கொண்டே இருந்தால் செயல்பாடுகளுக்கு நேரம் கிடைக்காது. இருபது ஆண்டுகளாக தடுப்பூசி தேவையா இல்லையா என்று விவாதித்து வருகிறோம் என்று ஆவேசப்படுகிறார் ஜென் ஸ்பான். அமைச்சர் ஆவேசப்படுவ