தடுப்பூசி போடாவிட்டால் அபராதம்!




main article image

அம்மை தடுப்பூசியை எதிர்க்கும் அமைப்பின் பிரசாரம், வலதுசாரிகளின் அதிகார பலம் ஆகியவை மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. இதன் பாதிப்பாகத்தான் மும்பை டெல்லியில் மாணவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்று கூறிய முஸ்லீம் பள்ளிகளைப் பற்றி முன்னர் பேசியிருந்தோம்.


அதேசமயம் அப்படி போட பெற்றோர் விரும்பாத போதும் அரசு நினைத்தால் அதை கட்டாயமாக்க முடியும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு. அண்மையில் தடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபாராதம் விதிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.

ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அபராதமாக 2500 யூரோக்களை விதித்துள்ளார். எங்களது நோக்கம் அபராத தொகையைப் பெறுவதல்ல. தடுப்பூசியை குழந்தைகளுக்கு சரியான நோக்கில் வழங்குவதே என்று கூறியுள்ளார்.


தொடக்க பள்ளியில் ஆறு வயதான குழந்தைகளுக்கு பெற்றோர் தடுப்பூசி போடாவிட்டால் அவர்களுக்கு ஜெர்மனி அரசு இனி அபராதம் விதிக்கும்.  எப்போதும் விவாதித்துக்கொண்டே இருந்தால் செயல்பாடுகளுக்கு நேரம் கிடைக்காது. இருபது ஆண்டுகளாக தடுப்பூசி தேவையா இல்லையா என்று விவாதித்து வருகிறோம் என்று ஆவேசப்படுகிறார் ஜென் ஸ்பான்.

அமைச்சர் ஆவேசப்படுவதிலும் நியாயமிருக்கிறது. 2018 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் 30 ஆயிரம் பேர்களுக்கு மேல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: சயின்ஸ் அலர்ட்