இடுகைகள்

நகம் கடிப்பது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதற்றமான சூழலில் ஒருவருக்கு ஏற்படும் பழக்கங்கள்!- நகம் கடிப்பது, சிகரெட் பிடிப்பது, விரல் சூப்புவது, அளவுக்கதிகமாக சாப்பிடுவது்

படம்
          ஒருவர் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும்போது கவனித்திருக்கிறீர்களா ? நகங்களை கடிப்பது , பேனாவைத் தட்டுவது , தலைமுடியை சுருட்டுவது , விசில் அடிப்பது , குதிகாலை அசைப்பது என பல்வேறு உடல்மொழிகளை வெளிப்படுத்துவார்கள் . இதனை நாளடைவில் ஒரே மேனரிசமாக மாற்றிக்கொண்டு செயல்படுவார்கள் . இப்படி பழக்கங்களை கற்றுக்கொள்வது ஒருவருக்கு ரிலாக்சாக அமையும் . அல்லது அதிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவர் பெறுவார் . அப்படியில்லாதபோது , அப்பழக்கத்தை ஒருவர் செய்யவேண்டியதில்லை . நகம் கடிப்பது பொதுவாக ஒருவருக்கு மனப்பதற்றம் ஏற்படும்போது இப்பழக்கம் ஏற்படுகிறது . உலகில் 44 சதவீத இளைஞர்களுக்கு இப்பழக்கம் உள்ளது . இவர்களின் பொதுவான வயது 19 முதல் 29 வயது வரையில் உள்ளது . குழந்தையாக இருந்து சிறுவன் அல்லது சிறுமியாக மாறுபவர்கள் இப்பழக்கத்தை கற்கிறார்கள் . அதுவும் கூட பிறரைப் பார்த்துதான் . விரல் சூப்புதல் இதுவும் கூட பாலருந்தும் குழந்தை , அந்த நினைவிலேயே தன்னை இருத்திக்கொள்வதற்கான நிலைதான் . இந்த பழக்கம் தொடரும்போது குழந்தையின் முன்பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிவதற்கான வாய்ப்