தானியங்கி முறையில் இயங்கும் கார்கள், அவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்!
என்ஓஏ, என்ஏடி, என்சிஏ, ஏசிடிஎம் என்ற சொற்களை கேட்டால் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? இதெல்லாம் கார் தயாரிப்புத் துறையில் பயன்படுகிற சொற்கள். இப்போது டிரெண்டிங்கில் இருப்பது தானியங்கியாக இயங்கும் கார்கள்தான். அப்படி இயங்குகிற கார் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படி சொற்களை கண்டுபிடித்து வைத்து குழப்புகின்றன. உண்மையில் கார்களின் தானியங்கி இயக்க முறை என்பது ஒரே முறைதான். ஆனால் வெவ்வேறு பெயர்களில் தொழில்நுட்பத்தை பயனர்களுக்கு காட்டி மயக்க முயல்கின்றன. லீ ஆட்டோவின் தொழில்நுட்பம் என்ஓஏ எனவும், ஹூவாய் என்சிஏ - நேவிகேஷன் க்ரூஸ் அசிஸ்ட் எனவும், டெஸ்லா - எஃப்எஸ்டி, எக்ஸ்பெங் நிறுவனம், எக்என்ஜிபி எனவும் பல்வேறு எழுத்துகளை இணைத்து புதுமையான பெயர்களை வைத்து வருகின்றன. இந்த கார் நிறுவனங்கள் லேசர், கேமரா ஆகியவற்றை பயன்படுத்தி தானியங்கி கார் சோதனைகளை செய்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துவது ஒரே தொழில்நுட்ப கருவிகள்தான். ஆனால் பெயர்களை மாற்றி வைத்து மக்களை ஏமாற்றி குழப்புகின்றன. இப்படி பயன்படுத்தும் கருவிகளுக்கு குறிப்பிட்ட தரம் இருக்கிறதா என்பதே கேள்விதான். பெரும்பாலான இதுபோன்ற சொல் வ