இடுகைகள்

சிறந்த கண்டுபிடிப்புகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த கண்டுபிடிப்புகள் - டைம் வார இதழ் 2025

 சிறந்த கண்டுபிடிப்புகள் - டைம் வார இதழ் 2025 ப்ரெய்லி டேப்லெட்  அமெரிக்காவில் ப்ரெய்லி முறையில் படிக்க டேப்லெட் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவையான நூல்களை எளிதாக உருவாக்கிவிட முடிவதில்லை. இதற்கு காரணம், அனைத்தையும் ப்ரெய்லி முறையில் உருவாக்கும் செயல்முறை கடினமாக உள்ளதுதான். அதைத்தான் இப்போது மாற்றியுள்ளனர். இந்த டேப்லெட்டில் எளிதாக ஒருவர் வாசிக்க முடியும். கிரேக் ஸ்டில்சன் என்பவர் இதை தயாரித்து உதவியுள்ளார். லீகோ விளையாட்டை அறிவீர்களா, அந்த முறையில் இந்த கருவியை அமைத்துள்ளனர். இப்போதைக்கு இதை 1,100 பிளாக்குகளுடன் வகுப்பறையில் பயன்படுத்தும்படி அமைத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடலாம். அமெரிக்காவில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இருபது சதவீதம் பேர் இதனால் பயன்பெறமுடியும்.  மோதிர ரிமோட் ஊரில் சிலர் தனியார் பேருந்துகளில் போகும்போது தங்களுடை நவீன போனை ரிமோட்டாக பயன்படுத்தி பேருந்திலுள்ள சிடி டிவிடி பிளேயரை நிறுத்துவது, பாடலை மாற்றுவது ஆகிய குறும்புகளை செய்வதுண்டு. அதேதான். தாவல் படேல் என்ன செய்திருக்கிறார் எ...

டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025

 டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025 ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 இந்த ஏர்பாட், பல மடங்கு முன்னே சென்றுள்ளது. வெறும் காதில் இரைச்சலை நீக்குவது மட்டுமன்றி, உங்கள் இதயத்தின் துடிப்பையும் அளவிடுகிறது. கூடுதலாக மொழிபெயர்ப்பு பணியையும் செய்கிறது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீசு மொழிகளை மொழிபெயர்க்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக சீனமொழி, கொரியன், ஜப்பானிய மொழி ஆகியவற்றை மொழிபெயர்ப்பதாக கூறியுள்ளது. ஆப்பிள் பொருட்கள் சாதாரண விலையில் கிடைப்பதில்லை. எனவே, இதுபோன்ற வசதிகளைக் கொண்ட பொருளின் விலை என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஆப்பிள்.காம் போய் தெரிந்துகொள்ளுங்கள்.  யுனிஹெர்ட்ஸ் செல்போன் ஆண்ட்ராய்ட் போன்தான். அத்தனை ஆப்களும் உண்டு.ஆனால் போன், டெபிட் கார்ட் அளவில் இருக்கும். 3 அங்குல திரைதான். எனவே,உங்களது பிரெயின் ராட் ஸ்க்ரோலிங் அதிகம் செய்யமுடியாது. அளவில் சிறியது என்பதால் எளிதாக எடுத்துச் செல்லலாம். சீன நிறுவனம் இந்தப் போனை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது. போனின் பின்புறம் நத்திங் போனில் அழைப்பு வந்தால் விளக்கு எரியுமே? அதே தொழில்நுட்பம் உள்ளது. சீரியல் பல்ப் கட்டியது மாதிரி அழகாக தெரியு...