ஆளுமை பிறழ்வு பல்வேறு வகையாக பத்து முக்கிய வகையாக இருப்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா. குறைபாடுகளைப் பார்க்கும் முன்னர் நாம் ஆளுமை என்பதை தெளிவாகப் பார்த்துவிடுவோம். ஆளுமை என்பது எப்படி உருவாகிறது, ஒருவர் வாழ்ந்து வரும் சூழ்நிலை, அவருக்கு கிடைக்கும் விஷயங்கள், கல்வி, குடும்ப சூழ்நிலை, இதனால் அவர் உலகை புரிந்துகொள்ளும் விதம். சிந்தனை, ஆகியவற்றை நாம் ஆளுமை உருவாக்கும் அம்சங்கள் எனலாம். நாட்டின் அதிபராக உள்ளவர் பற்றி கருத்து என்றால் அதை நீங்கள் அடுத்த பிரதமர் வேறு ஒரு கட்சி சார்ந்து தேர்ந்தெடுக்கப்படும்போது மாற்றி்க்கொள்ளலாம். ஆனால் ஒருவரின் ஆளுமை அப்படிப்பட்டதல்ல. உளவியல் ஆய்வாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் இந்த வகையில் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். காலப்போக்கில் இவரது சில யூகங்கள் தவறு என்றாலும் கூட உளவியல் ஆய்வில் முக்கியமான ஆய்வுப்பங்களிப்பு செய்தவர் இவர். இவரைப் பற்றி தமிழில் நிறைய நூல்கள் வந்துள்ளன. இணையத்தில் கூட இவரைப் பற்றி தேடிப்படிக்கலாம். ஒருவரின் ஆளுமை என்பது அவர் பிறந்து சில ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். பிற விலங்கினங்கள் குட்ட...