இடுகைகள்

விக்டர் ஃபிராங்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான அர்த்தம் - விக்டர் ஃபிராங்கல்

படம்
மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் விக்டர் ஃபிராங்கல் உளவியல் நூல்  ஆஸ்திரியாவைச் சேர்ந்தவரான விக்டர், நாஜிப்படையினரால் பிடிபட்டு வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைத்த வரலாறு கொண்டவர். இதுபற்றி அவர் எழுதிய நூல்தான் இது. சித்திரவதை முகாம் என்றதும், முழுமையாக நூல் முழுவதும் மோசமான சித்திரவதை அனுபவங்கள்தான் இருக்கும் என நினைக்கவேண்டியதில்லை. நூல் 69 பக்கங்களைக் கொண்டது. ஆனால் படித்து முடிக்க அந்தளவு எளிமையாக இல்லை. அந்தளவு அனுபவங்களின் அடர்த்தி உள்ளது.  நூல் இருபாகங்களாக உள்ளது. முதல்பகுதி முழுக்க வதை முகாம்களின் அனுபவங்கள் உள்ளன. இரண்டாம் பகுதியில், தனது வதைமுகாம் அனுபவங்களின் அடிப்படையில் அவர் கண்டறிந்த லீகோதெரபி எனும் உளவியல் உத்தியை விளக்கியிருக்கிறார். இந்த உத்திகளை படித்து புரிந்துகொள்வது அவர் சார்ந்த துறையினருக்கு எளிமையாக இருக்கலாம். சாதாரணமாக ஒருவர் அதைப் படித்தால் சற்று தலைச்சுற்றிப்போகும் அபாயம் உள்ளது. முயற்சி செய்யலாம். சில நோயாளிகளைப் பற்றிய அனுபவங்களைக் கூறியுள்ளார். அதைப்படிக்கும்போது முன்முடிவுகளின் ஆபத்து கண்களுக்குத் தெரிகிறது.  நூலின் தொடக்கத்திலேயே தான் வதை முகாம்