இடுகைகள்

தெரபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உளவியல் பிரச்னைக்கு நேரடி தீர்வு!

படம்
  உளவியல் சிகிச்சை என்பது முதலில் நோயாளியை அடிப்படையாக கொண்டு இயங்கியது. அதாவது, தனக்கு நேர்ந்த பிரச்னைகளை அனுபவங்களை அவர் கூறுவது சிகிச்சையில் முக்கியமான அங்கம். இந்த வகையில் மருத்துவர் நோயாளியின் நோய் வரலாறு, உணர்வுரீதியான வலி, வேதனை, குண இயல்புகளின் மாற்றம் ஆகியவற்றை அறிந்துகொண்டார். இந்த வகையில் சிகிச்சை அளிப்பதை இன்சைட் என்று ஆஸ்திரிய அமெரிக்க உளவியலாளர் பால் வாட்ஸ்லாவிக் குறிப்பிட்டார்.  உலகில் பலரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஒருவர் துயரத்தில் முழ்கியிருந்தால் அவரைப் பற்றி ஆழ்ந்து அறிவது முக்கியம் என்று பால் கூறினார். இதனால், அவர் பிரச்னைகளின் மீது நேரடியான சிகிச்சையை செய்தார். அதற்கு முன்னர் வரை ஒருவரின் கடந்தகாலத்தை அறிந்து பிறகே நோயின் வேரைக் கண்டுபிடித்து அதை தீர்க்க நினைத்தனர். ஆனால் இந்த முறை நோயாளியை மேலும் துயரத்தில் தள்ளியது. எடுத்துக்காட்டாக, ஒருவரை அன்பாக பார்த்து வளர்த்த அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். அவரது மகனால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் தாய் இறந்ததைப் பற்றி நினைவுபடுத்துவது மேலும் வலியை வேதனையை உருவாக்கும். இ

மனதில் தேங்கியுள்ள மோசமான மனநல குறைபாட்டை, பதற்றத்தை தணிக்கும் உளவியல் சிகிச்சை முறை - ஜோசப் வோல்பே

படம்
  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் ஜோசப் வோல்பே. விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு ராணுவத்தில்சேர்ந்து பிடிஎஸ்டி குறைபாட்டிற்கு சிகிச்சை அளித்தார். இந்த குறைபாட்டை அப்போது வார் நியூரோசிஸ் என்று அழைத்தனர். நோயின் அறிகுறியை அறியாமல் மனநல குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க முயன்றார். இதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார். பிறகு 1960ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு டெம்பிள் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். குண இயல்பு சார்ந்த சிகிச்சை மையம் ஒன்றை உருவாக்கி எண்பத்திரெண்டு வயது வரையில் இயங்கினார். நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.  முக்கியமான படைப்புகள்  1958 psychology by reciprocal inhibition 1969 practice of behavioral therapy 1988 life without fear இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பல உளவியலாளர்களும் பிராய்ட் கூறிய மனப்பகுப்பாய்வு சார்ந்தவற்றில்தான் இயங்கினர். ஆழ்மனதில் உள்ள முரணான சக்திகளால் மனப்பதற்றம் ஏற்படுகிறது என்று கருதி வந்தனர். ஆழ்மனத்தில் உள்ள தன்ன

அவதாரம் மின்னூல் அட்டைப்படம் வெளியீடு!

படம்
 

சிறுவயதில் சிறுவர்களிடம் காணப்படும் குற்றத்தின் அடையாளங்கள்!

படம்
  என் மகனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இப்போது அவனுக்கு பதினைந்து வயதாகிறது.இதற்குள் ஏழுமுறை சிறைக்கு சென்றுவிட்டு வந்துவிட்டான். ஒரு விஷயத்தை செய்து அவன் பிடிபட்டால் அது தவறு. பிடிபடாவிட்டால் நல்லது என்று புரிந்துகொண்டு இருக்கிறான். நாங்கள் அவனை அடித்தோம். மிரட்டினோம். மனநல சிகிச்சைகளை வழங்கினோம். ஆனால் எதுவும் அவனை மாற்றவில்லை என தாயார் ஒருவர் ராபர்ட் ஹரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். சிலர், தங்களது மகன் பொய்யை சொல்லி நிறைய சங்கடங்களை ஏற்படுத்துவார்கள். பெற்றோர்களுக்கு தங்களது மகனை சைக்கோபாத் என்று சொல்லிவிடுவார்கள் என பயம் இருக்கிறது. அப்படி மருத்துவர், உளவியலாளர் சொல்லிவிடுவாரோ என்று டீனேஜ் பையன் சார் அவன் என மாற்றி பேசுவார்கள். ஆனால் ஆய்வு அடிப்படையில் அறிகுறிகளை உணர்ந்தால் கசப்பான சைக்கோபாத் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். வேறுவழியில்லை.   ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் மோசமான பொய் சொல்லும், கட்டற்ற வன்முறை, பிறரை ஏமாற்றும் குணம் கொண்டவர்கள் மோசமான குற்றவாளிகளாக மாறுவார்கள் என்பது வரலாற்று உண்மை.   சில அறிகுறிகளைப் பார்ப்போம்.   இயல்பாக தொடர்ச்சியாக தேவ

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்ள.....

படம்
ஆட்டிசம் சில புரிதல்கள் யெஸ்.பாலபாரதி பாரதி புத்தகாலயம் ரூ.50 ஆட்டிசம் என்றால் என்ன, அதனை எப்படி அணுகுவது, இக்குறைபாடு கொண்ட குழந்தைகளை எப்படி பயிற்சி அளிப்பது, சமூகத்தில் கலந்து உறவாட வைப்பது, ஆட்டிசக் குழந்தைகளின் உணவுப்பழக்கம் என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் விரிவாக விளக்கியிருக்கிறார். ஆட்டிசத்தை முதலில் கண்டறிந்து கூறிய லியோ கானர் என்ற மருத்துவர் தொடங்கி, பெற்றோருக்கான குறிப்புகள், பயிற்சிகள், இக்குறைபாட்டுடன் சாதித்த ஆல்பிரட் ஐன்ஸ்டீன் வரை விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இது வெறும் ஆட்டிசம் பற்றிய நூலாக இல்லாமல் அனுபவ நூலாக இருப்பதன் காரணம், ஆசிரியரின் மகனும் ஆட்டிசக் குறைபாடு பாதிப்பு உள்ளவன் என்பதால்தான். சாதாரண பள்ளிகளில் ஆட்டிசக் குழந்தைகளை படிக்க வைப்பது சிரமம். எனினும் அதனை ஆசிரியர் முக்கியம் என்கிறார். சிறப்பு பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஆட்டிச குறைபாடு உள்ள மாணவர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பாலபாரதி. சாதாரணமானவர்கள் சூழலைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என்றால், ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு அனைத்தையும் சொல்லித் தருவது கட்டாயம்.  ஆட்டிச

ஆட்டிசக்குழந்தைகளுக்கான வழிகாட்டல்! - எழுதாப் பயணம்

படம்
புத்தக விமர்சனம்! எழுதாப்பயணம் லஷ்மி பாலகிருஷ்ணன் கனி புக்ஸ்  ரூ.100 இந்த நூல் அனைவரும் படிக்கவேண்டிய நூல். காரணம் பேசியுள்ள பொருள் ஆட்டிசம் தொடர்பானது என்பதால்தான்.  சாதாரணமாக ஆட்டிசம் என்பதை பொதுப்படையாக ஒருவர் பேசுவதையும், அதற்கான தீர்வுகளை முன்வைப்பதும் எளிது. காரணம், இந்த விஷயத்தை அவர் மூன்றாவது நபராகத்தான் பார்க்கிறார். ஆனால் அதே பிரச்னையை அவர் தினசரி சந்திப்பவராக இருந்தால் எப்படியிருக்கும்? இடதுசாரி சிந்தனையாளரான குழந்தை இலக்கிய எழுத்தாளரான பாலபாரதி (பாலகிருஷ்ணன்) தினசரி சந்தித்துக்கொண்டிருப்பது இத்தகைய சூழ்நிலையைத்தான். அவரின் பிள்ளை கனிவமுதன் ஆட்டிசக்குழந்தை.  பாலகிருஷ்ணனின் மனைவி லஷ்மி இந்த நூலை, ஒரு தாயாக இருந்து எழுதியுள்ளது இதன் சிறப்பம்சம். ஆட்டிசம் என்பதை என்னவென்றே தெரியாமல் உள்ளவர்கள் அநேகம்பேர். இதற்கான பள்ளிகள் இன்று மெல்ல உருவாகி வளர்ந்து வருகின்றன. இக்குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதை ஏராளமான டிகிரிகளை தங்கள் பெயரின் பின்னால் கொண்டவர்கள் கூட அறிந்திருப்பதில்லை.  அதைத்தான் இந்த நூலில் லஷ்மி மிக அழுத்தமாக கோடிட்டு கா