இடுகைகள்

வரலாறு- வங்கி திவால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திவால் நோட்டீஸ் கொடுத்த வங்கிப்பெண்!

படம்
லேடி தில்லாலங்கடி ! போஸ்டன் நகரைச் சேர்ந்த சாரா ஹோவே , டஜன்கணக்கில் ஸ்பெஷல் வங்கிகளை நடத்தி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து திவாலாகியே நாட்டில் பிரபலமானவர் . அக்காலத்தில் அவர் தொடங்கி லேடீஸ் டெபாசிட் வங்கி , மக்களின் பேச்சு மூலம் பிரபலமானது . 200 - 1000 டாலர்கள் வரை வங்கியில் டெபாசிட் தொகை பெறப்பட்டது . வட்டி 8%.  40 ஆயிரம் டாலர்கள் விலையில் சொகுசு வீடு வாங்கி குடியேறிய சாரா , 8 சதவிகித வட்டியை எப்படி தருகிறீர்கள் என்று கேட்டதற்கு பதிலே கூறவில்லை . 1880 ஆம் ஆண்டு போஸ்டன் டெய்லி அட்வர்டைசர் பத்திரிகை சாராவின் வங்கி குறித்த தொடர் புலனாய்வு கட்டுரைகளை எழுத வங்கிக்கு சரிவு தொடங்கியது . அக்டோபர் 16 அன்று கைதான சாரா மீது 5 பேர் குற்றம்சாட்டினர் . 1881 ஆம் ஆண்டு சாராவுக்கு மூன்றாண்டு சிறைதண்டனை விதிக்கப்ட்டு திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டது . அதற்குப்பின் 1884 ஆம் ஆண்டு புதியவங்கி தொடங்கி 7% வட்டி கொடுத்து நடத்தி 1887 ஆம் ஆண்டு தலைமறைவானார் . 1892 ஆம் ஆண்டு மறைந்த சாரா , தான் திவால்பார்ட்டி என்பதை ஒப்புக்கொள்ளவேயில்லை .