திவால் நோட்டீஸ் கொடுத்த வங்கிப்பெண்!



Image result for Mrs. Sara E. Howe



லேடி தில்லாலங்கடி!

Image result for Mrs. Sara E. Howe


போஸ்டன் நகரைச் சேர்ந்த சாரா ஹோவே, டஜன்கணக்கில் ஸ்பெஷல் வங்கிகளை நடத்தி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து திவாலாகியே நாட்டில் பிரபலமானவர். அக்காலத்தில் அவர் தொடங்கி லேடீஸ் டெபாசிட் வங்கி, மக்களின் பேச்சு மூலம் பிரபலமானது. 200 - 1000 டாலர்கள் வரை வங்கியில் டெபாசிட் தொகை பெறப்பட்டது. வட்டி 8%. 


40 ஆயிரம் டாலர்கள் விலையில் சொகுசு வீடு வாங்கி குடியேறிய சாரா, 8 சதவிகித வட்டியை எப்படி தருகிறீர்கள் என்று கேட்டதற்கு பதிலே கூறவில்லை. 1880 ஆம் ஆண்டு போஸ்டன் டெய்லி அட்வர்டைசர் பத்திரிகை சாராவின் வங்கி குறித்த தொடர் புலனாய்வு கட்டுரைகளை எழுத வங்கிக்கு சரிவு தொடங்கியது. அக்டோபர் 16 அன்று கைதான சாரா மீது 5 பேர் குற்றம்சாட்டினர். 1881 ஆம் ஆண்டு சாராவுக்கு மூன்றாண்டு சிறைதண்டனை விதிக்கப்ட்டு திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின் 1884 ஆம் ஆண்டு புதியவங்கி தொடங்கி 7% வட்டி கொடுத்து நடத்தி 1887 ஆம் ஆண்டு தலைமறைவானார். 1892 ஆம் ஆண்டு மறைந்த சாரா, தான் திவால்பார்ட்டி என்பதை ஒப்புக்கொள்ளவேயில்லை.


பிரபலமான இடுகைகள்