மக்களைக் கொல்லும் சால்டன் சீ ஏரி



Image result for california salt lake pollution


நச்சு ஏரி!

Image result for california salt lake pollution


கலிஃபோர்னியாவிலுள்ள ஏரி வேகமாக சுருங்கி வருவதோடு, நச்சு மாசுக்கள் மக்களின் வாழ்வை குலைத்து வருகின்றன. 2009 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவிலுள்ள இம்பீரியல் கவுண்டியில் மிட்செல்லின் தங்கை மேரி ஆஸ்துமா தாக்குதல் ஏற்பட்டு சில மணிநேரத்தில் இறந்துபோனார். காரணம், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று. 27 வயதில் எண்பது வயதானவர் போல நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது.

இம்பீரியல் கவுண்டியில் ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கிறது. பூச்சிக்கொல்லிகள், பயிர்களை எரிப்பது, கார்களில் வரும் புகை, மணல் புயல் என ஒவ்வொரு காற்றின் ஒவ்வொரு அங்குலத்திலும் மாசுக்கள் அதிகரித்து வருகின்றன. சால்டன் ஏரியில் தொடர்ச்சியாக நீர் குறைந்து மாசுக்கள் அதிகரித்துவருகிறது. இரானின் ஊர்மியா ஏரி, ஆப்பிரிக்காவின் சாட் ஏரி ஆகியவை இதுபோல 90% வறண்டுபோன நிலையை எட்டியவை. சால்டன் ஏரி நீர் குறைய குறைய வறண்ட அதன் நீர்ப்பரப்பிலிருந்து வரும நச்சு துகள்கள் காற்றில் பரவத்தொடங்கியதுதான் மேரி போன்றவர்கள் ஆஸ்துமா தீவிரமாகி இறக்க காரணம்.





பிரபலமான இடுகைகள்