வீக்எண்ட் பிட்ஸ்! விண்வெளியில் ஃபுட்பால்!





Related image



பிட்ஸ்!

விண்வெளியில் ஃபுட்பால்!

ரஷ்யாவில் கால்பந்துபோட்டி தொடங்கவுள்ள நிலையில் கால்பந்து ஜூரம் விண்வெளிக்கும் பரவிவிட்டது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ரஷ்யவீரர்கள் ஆன்டன் ஸ்காபில்ரோவ், ஆலெக் ஆர்டெமியெவ் ஆகிய இருவரும் புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் கால்பந்து விளையாடிய வீடியோதான் இணையத்தில் ஹாட் வைரல்.

போய்வா தங்கமே!

கொச்சியின் எடப்பள்ளியிலுள்ள புனித ஜார்ஜ் சர்ச்சில் பிறந்து இரு நாட்களேயான குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் என்கொயரியில் குழந்தையை முத்தமிட்டு சர்ச்சில் வைத்து செல்பவரைக் கண்டுபிடித்தனர். அவர் வேறுயாருமல்ல; பிட்டு டேவிஸ் எனும் குழந்தையின் தந்தை. வறுமையின் காரணமாக நான்காவது குழந்தையை முத்தமிட்டு கைவிட்டது தெரிந்து உலகமே உச்சு கொட்டியுள்ளது.

கோவிந்தா டான்ஸ்!


மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியர் சஞ்சீவ் வஸ்தவா கித்தாய்ப்பாய் போட்ட கோவிந்தா டான்ஸ் இணையத்தில் கிறுகிறு வைரல். 'ஆப் கே ஆ ஜானே சே' என்ற பாடலுக்கு போட்ட ஸ்டெப்கள் பாலிவுட் பிரபலங்கள் அனுஷ்கா சர்மா, அர்ஜூன் கபூர் ஆகியோரையும் லைக் போட வைக்க, செலிபிரிட்டியானார் அங்கிள். இணையத்தில் அங்கிள் டான்ஸையும் காப்பி செய்து டான்ஸ் ஆடி வருகின்றனர்.

பெண்களுக்கு தனிவழி!

சீனாவின் குவாங்சூ நீச்சல்குளத்தில் பெண்வீரர்களுக்கென தனி நீச்சல் பாதை அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அனுபவம் இல்லாத பெண்களுக்காக இந்த வசதி என நீச்சல்குள நிர்வாகம் கூறியுள்ளது. வேகமாக நீந்தும் ஆண்களால் பெண் வீரர்கள் தடுமாறுவதால் இந்த முயற்சி என பாராட்டும் கிடைத்து வருகிறது.

ஆபரேஷனில் ஆட்டம்!


அமெரிக்காவைச் சேர்ந்த தோல்சிகிச்சை டாக்டர் விண்டெல் பௌட் ஆபரேஷன் செய்யும்போது அதீத உற்சாகத்தில் லேசாக டான்ஸ் ஸ்டெப் போட்டார். இந்த வீடியோக்களை தன் யூட்யூப் சேனலில் ஆர்வக்கோளாறாக பதிவிட்டதுதான் வேலைக்கே உலைவைக்கும் பிரச்னை. டாக்டரால்  பாதிக்கப்பட்ட நோயாளிகள் டஜன் கணக்கில் அவர் மீது வழக்கு பதிவுசெய்து வருகின்றனர்.