காஷ்மீர் தாக்குதல்கள்!




Image result for kashmir attack



வன்முறை வாழ்வு!


Image result for kashmir attack




காஷ்மீரில் கடந்த மார்ச் 2015 முதல் இன்றுவரை நடந்துள்ள அரசு தாக்குதல்களின் அளவ 53 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தாக்குதலில் இறக்கும் மக்களின் அளவு 51 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் மக்கள் ஜனநாயக கட்சியுடன், பாஜக கட்சி இணைந்து காஷ்மீரில் கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. ஜூலை 2016 ஆம் ஆண்டு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தைச் சேர்ந்த புர்கான் வாணி ராணுவத்தால் கொல்லப்பட்டபிறகு துப்பாக்கிச்சூடு அதிகரித்துள்ளது.

 2017 ஆம் ஆண்டு இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 209(136 இறப்பு-2016). "பேச்சுவார்த்தைக்கு இடமளிக்காத வன்முறை, துப்பாக்கிச்சூடு,கல்வீச்சு ஆபத்தானது" என்கிறார் காஷ்மீர் பல்கலை பேராசிரியர் நூர் அகமது பாபா.

2015-2017 ஆம் ஆண்டில் 4,744 கல்வீச்சு சம்பவங்கள், 274 என்கவுண்டர் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 439 பேர் இறந்ததில் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 156 பேர். தீவிரவாத ஒழிப்பில் மக்களின் 105 வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளன.