சைக்கிள் துறைக்கு இந்தியாவில் எதிர்காலம் உண்டா?
சைக்கிள் சவாரி!
உலகளவில் சைக்கிள்
விடுவதில் சீனாவுக்கு அடுத்த இடம் இந்தியாவுக்குத்தான். சந்தை
மதிப்பு 65 பில்லியன். அதேவேளையில் சைக்கிள்
வாங்க கூட வசதி இல்லாத 320 மில்லியன் இந்தியர்கள் தினசரி ஆறு
கி.மீ தூரம் நடந்து வேலைக்கு செல்கின்றனர்.
கிராமங்களில் சொந்தமாக
சைக்கிள் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 46 சதவிகிதம். இந்தியாவில் முன்னணி சைக்கிள் நிறுவனமான ஹீரோ, 1,999 ரூபாய் விலையில் புதிய சைக்கிளை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
"இந்தியாவில் பதினைந்து மில்லியன் சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன.
உள்நாடு மற்றும் வெளிநாடு மார்க்கெட்டும் சுணங்கிவருவது மீள்வது கடினம்"
என்கிறார் ஹீரோ சைக்கிள் நிறுவனரான பங்கஜ் முஞ்சால்.
தற்போது 3 ஆயிரம்
விலை கொண்ட சைக்கிளுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதம் விதிக்கப்படுவதை
மார்க்கெட் சரிவுக்கு காரணமாக சுட்டும் வல்லுநர்கள்,காலணிகளுக்கு
வரி குறைவாக உள்ளதையும் குறிப்பிடுகின்றனர். சைக்கிள் விற்பனை
அளவு 65 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக
குறைந்துள்ளது.
இந்தியாவில் ஆயிரம்
வீடுகளுக்கு அறுபது சைக்கிள்களும் நெதர்லாந்தில் ஆயிரம் வீடுகளுக்கு 1,040 சைக்கிள்களும்
உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.