மாஸ் வீக்எண்ட் பிட்ஸ்! காசைத் திருப்பிக்கொடுங்க! - வாலிபரின் கதறல்




Image result for killbill pandey


கற்பழிப்புக்கு காரணம் பெண்களா!

"வல்லுறவைத் தடுக்க ஆட்டோ, பஸ், ட்ரெயின் என எதில் போனாலும் ஆண்களைவிட்டு விலகியிருங்கள். அரைகுறை உடைகளை தவிருங்கள்" என்று சொன்னது அரசியல் தலைவரல்ல; தமிழ்நாட்டின் சமச்சீர் பாடத்திட்டத்தில் வெளியான எட்டாம்வகுப்பு அறிவியல் நூலில் இந்த போதனை அச்சிடப்பட்டுள்ளது.

"செக்ஸ் கல்விக்காக எழுதப்பட்டுள்ள அப்பகுதி அச்சிடப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும் சிலபஸை நாங்கள் மாற்றிவிட்டோம்" என்கிறார் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநரான ஜி.அறிவொளி. ஆனால் முதன்மைச்செயலாளர் பிரதீப் யாதவ், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது, விரைவில் இவ்விவகாரத்தை கவனிப்பதாக கூறியுள்ளார். பாலின சமத்துவத்துக்காக போராடும் நக்‌ஷத்ரா என்ஜிஓவைச் சேர்ந்த ஷெரின் போஸ், "பாலியல் வல்லுறவுக்கு பெண்களே காரணம் என பள்ளி நூல்களிலேயே எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது" என்கிறார். பாலியல் கல்வி குறித்த பரிந்துரைகளைப் பெற்று ஆறாம் வகுப்பு நூல்களில் இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

2

காசைத் திருப்பிக்கொடுங்க!

ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறோம், டிக்கெட் பதிவு செய்கிறோம். இதில் பிரச்னையாகும்போது பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் நிறுவனம் திருப்பி அளிப்பது நடைமுறை. ஆனால் ராஜஸ்தான் வாலிபர் தன் பணத்தைத் திரும்ப பெற ஓராண்டாக அலைந்து வருகிறார்.

இவ்வளவு அலைச்சல் தரும்படி அவ்வளவு பெரிய தொகையா? ரூ. 35 தான். கடந்தாண்டு ராஜஸ்தான் நகரான கோட்டாவிலிருந்து டெல்லி செல்ல பதிவு செய்திருந்தார் சுஜித் ஸ்வாமி. ஆனால் பயணத்தை ரத்து செய்தபோது டிக்கெட் விலையான 765 ரூபாயில் 665 ரூபாய் கிடைத்துவிட்டதுரத்து செய்வதற்கான தொகையாக 65 க்கு பதில் நூறு ரூபாயை பிடித்துக்கொண்டனர். விடாக்கண்டனான சுஜித் தகவலறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டால், ஜிஎஸ்டி காரணம் என புதுமையாக தகவல் பணம் தர ஓராண்டாக மறுத்துவருகிறது ரயில்வே நிர்வாகம். லோக் அதாலத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரயில்வே மேலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இனி போராட்டமே ஒரே தீர்வு!
,
3


ஆஹா! கல்யாண போலீஸ்!

ராஜஸ்தானின் தோங் மாவட்டத்தைச் சேர்ந்த மம்தாவுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கான அத்தனை செலவுகளையும் தத்வாஸ் பகுதி காவல்நிலையமே ஏற்றுக்கொண்டதுதான் ஆச்சரியம்.

சிறுவயதிலேயே தந்தையை பறிகொடுத்த மம்தா வீட்டுவேலைகளை செய்து பிழைத்துவந்தார். அவரின் ஒரே உறவான சகோதரரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். ஆதரவற்று நின்ற மம்தாவுக்கு கண்ணீர் சிந்தி அழ நேரமில்லை; சகோதரர் வாங்கிய கடன் சுமை அப்படி. போலீஸ் ஸ்டேஷனை சுத்தம் செய்து வந்த மம்தாவின் நிலைமையறிந்த காவலர்கள் ஒன்றுசேர்ந்து அவரின் திருமணத்திற்கு நிதியுதவி செய்ததோடு திருமணத்தையும் முன்நின்று நடத்தியதுதான் இதில் ஹைலைட். ரைட்ஹேண்டில் சல்யூட் பண்ணலாம்தானே?


பிரபலமான இடுகைகள்