இடுகைகள்

சோர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல் களைத்து தளர்ந்து தூங்குகிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி மிகவும் உடல் தளர்ந்து சோர்ந்து தூங்குவது சாத்தியமா? கணக்கு பாடத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தாலே தலை கிறுகிறுவென்று ஆகி படுத்து தூங்கியவனைப் பார்த்து இந்தக்கேள்வி. பொதுவாக நமக்கு ஐம்புலன்கள் பகலில் வேலை செய்யும். அதில் சிலருக்கு பாரபட்சமாக சில உறுப்புகள் வேலை செய்யப்பட திறன்கள் மாறும். ஆனால் இயல்பாக கண்கள் சோர்ந்து போனால், மூளை படுத்துவிடும். உடனே ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றுவது போல எதையும் செய்ய முடியாது. உடனே தூங்கிப்போனால் உடல் புத்துணர்ச்சியோடு எழும். அப்போது உணவு, தண்ணீர் கூட உடலுக்கு தேவைப்படாது. பேய்த்தூக்கம் போல சிலர் தூங்குவார்கள். மிகவும் உடல் தளர்ந்து தூங்குவது என்பது அரிசி மூட்டை தூக்குவது, பழக்கமின்றி திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுவது போன்றவை செய்தால் நிச்சயம் கடுமையாக சோர்ந்து போய் தூக்கம் வரும். நன்றி - பிபிசி

சூரிய வெப்பத்தால் உடலின் கொழுப்பு கரையுமா?

படம்
pixabay.com மிஸ்டர் ரோனி சூரிய வெப்பத்திலிருந்து க்ரீம்கள் நம்மைக் காக்குமா? எஸ்பிஎஃப் 30 என அச்சிடப்பட்ட க்ரீம்கள் ஓரளவு உங்கள் தோலை சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். காக்கும் என்பதன் பொருள் அதிலுள்ள புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து... ஆனால் க்ரீம்களிலேயே மைக்ரோ பிளாஸ்டிகள் இன்னொரு வகை பிரச்னை வந்தால் கஷ்டம் சால கஷ்டம்தான். இந்தப் பிரச்னைகளை நீங்களே யோசித்துக்கொண்டு க்ரீம்களைப் பூசுங்கள். சூரிய வெப்பம் உடல் கொழுப்பைக் குறைக்குமா? சூரிய வெப்பத்திலிருந்து கிடைக்கும் விட்டமின் டி, உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஆனால் அதற்காக வெயிலில் நீங்கள் உட்கார்ந்திருந்தால் எந்த பிரயோஜனமும் நிகழப்போவதில்லை. உடலில் நீர்ச்சத்து கீழிறங்குவது தவிர வேறெதுவும் நடக்காது. நன்றி - பிபிசி

கார் விபத்துகள்

படம்
கார் ஓட்டும்போது சோர்வு ஏற்படுவது ஏன்? பொதுவாக கார் ஓட்டுவதற்கும் சோர்வுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. விமானத்தில் பயணிக்கும்போது, அதை நாம் கன்ட்ரோல் செய்யமுடியாது என்று நம்பி தடுமாறுபவர்கள், கார்களில் செல்லும்போது தைரியமாக இருப்பார்கள். கார்களில் செல்லும்போது ஏற்படும் விபத்துகளில் மட்டும் உலகளவில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்எம்ஐடி பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், கார் ஓட்டும்போது ஏற்படும் உறக்கச் சோர்வில் நொடிக்கு ஏழுமுறை உறக்கச்சோர்வு ஏற்படுகிறது. நன்றி: பிபிசி

தள்ளிப்போடாதீங்க மக்களே!

படம்
தள்ளிப்போடாதீங்க! காலையில் பேஸ்ட் அழுத்தி பல் விளக்கு பாலாஜி தயங்கி தயங்கி தேய்க்கணுமா ப்ரோ என்பான். போடா பக்கி என்றவுடன் பாத்ரூமுக்கு போனவன், ஐந்து நிமிஷத்தில் திரும்பி காபி கப்பைத் தூக்குவான். பையன் படு சுறுசுறுப்பு என வியக்கும்போதே, நாளிதழ் படிக்கும் என் மீது இடது காலைத் தூக்கிப்போட்டு அப்படியொரு அப்பாவித்தனத்தோடு தூங்கிவிடுவான். காபி குடிச்சா சுறுசுறுப்புன்னு சண்டாளி டிவில சொன்னாளேன்னா அதுக்கு நடைமுறையில எந்த எக்சாம்பிளும் கிடையாதுன்னு அஷ்ரத் ராவுத்தர் வேறு கம்யூனிஸ்டா மாறி மல்லுக்கு நிற்பார். பாலாஜியின் தோழர்தான். எந்த இன்டர்வியூவுக்கும் தனக்கு தெரியுதோ இல்லையோ அப்ளை பண்ணி உள்ளே புகுந்து காலி செய்வது பாலாஜியின் வழக்கம். கேம் டிசைனுக்கான பயிற்சியையே இன்டர்வியூக்கு முதல்நாள் உட்கார்ந்து செய்து வியக்க வைப்பார்.  இன்டர்வியூ ரிசல்ட், பாலாஜிக்கு முன்னதாகவே உலகிற்கு தெரிந்துவிடும். அதேதான். தள்ளிப்போடாதே என்று கூறுவது. கிளாசுக்கு போகும் நேரம் தவிர்த்து என்னதான் செய்கிறார். எப்போதும் பப்ஜியில்தான் இருப்பார். அனைத்து இடங்களிலும் பிரச்னையாவது இதுதான். இதுகுறித்த  டேட