இடுகைகள்

மெலானி கிளெய்ன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கை, இறப்பு என இரண்டு புள்ளிகளுக்குள் ஓடும் ஓட்டம்!

படம்
  வாழ்க்கையில் நல்லது, கெட்டது என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை ஒருவர் தவிர்க்கவே முடியாது. நல்ல விஷயங்களை எதிர்கொள்ளும் நேரம், நினைத்தே பார்க்க முடியாத விஷம் கொண்ட சுயநலமான மனிதர்களையும் எதிர்கொள்ளவேண்டும். இதுதான் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒருவரை சுழன்றடித்துக்கொண்டே வருகிறது. நன்மை, தீமை என இரண்டு விஷயங்களுமே சமூகத்தை ஒருவகையில் முன்னே நகர்த்துகின்றன என்று கூறவேண்டும். ஒன்று இல்லாதபோது மற்றொன்று இல்லை.  இறப்பு பற்றிய பயத்தை ஒருவர் நீக்கிக்கொள்ளவே பாலியல் மீதான ஈர்ப்பு உதவுகிறது என ஃப்ராய்ட் கருதினார். ஆராய்ச்சியாளர் மெலானி கிளெய்ன், இந்த கருத்தை விரிவுபடுத்தினார். இறப்பு பயத்தை வெளியே கொண்டு வந்தால், அது உள்ளுணர்வில் ஆபத்தை உணர்ந்து தப்பிக்கும் ஆவேசம் கொண்ட தன்மையை அடைகிறது. இதை பாலியல் உணர்வுக்கு எதிராக நிறுத்தலாம். வளர்ச்சி, புதுமைத்திறன் என்ற ஆசைகள் எந்தளவு ஆழமாக வேர்விடுகிறதோ, அதற்கு நிகராக அதை எதிர்க்கும் அழிவு சக்திகளும் வேர்விட்டு வளர்கின்றன. இந்த முரண்பாடுகள்தான் வன்முறை, ஆவேசம் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. பிறந்த குழந்தை வெளியுலகிற்கு ஏற்ப வாழ தன்