இடுகைகள்

விநோதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நியூஸ் பிட்ஸ்! - மும்பையில் இறந்த சேமிப்பு மன்னர்!

படம்
சேமிப்பு மன்னர்! மும்பையில் ரயில் பாதையில் இறந்துகிடந்த பிச்சைக்காரரிடம் 11.5 லட்சம் ரூபாய் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானைப் பூர்விகமாக கொண்ட பிராடிசந்த் பன்னாராம்ஜி  என்று பெயர் அறியப்பட்டுள்ளார். இவர்,  நாணயங்களாக 1.75 லட்சமும், வைப்புத் தொகையாக 8.77 லட்சரூபாயும், சேமிப்புக்கணக்கில் 96 ஆயிரம் ரூபாயும் சேமித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. சூழல் போராட்டம்! உலகமெங்கும் அரசுகளுக்கு எதிரான சூழல் போராட்டம் வெடித்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சட்டமறுப்புஇயக்கமாக சூழலியலாளர்கள் தெருக்களில் அமைதியாகக் கூடி போராடி வருகின்றனர். லண்டனில் இருநூறுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தூய்மையான கங்கை! 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூய்மையான கங்கை திட்டத்தொகை ஐந்து ஆண்டுகளில் 15 மடங்கு உயர்ந்துள்ளது. மத்தியஅரசு 2015-2020 காலகட்டத்தில் தூய்மைப்பணிக்காக 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. தற்போது நமாமி கங்கா திட்டத்தொகை 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார் தூய்மை கங்கை திட்ட இயக்குநரான ராஜீவ் ரஞ்சன் மிஷ்ரா.

மூன்று வேலைகளில் முன்னேறிய அரசு ஊழியர் - பீகார் பரிதாபம்

படம்
ஆஹா! மூன்று வேலையில் முப்பது வருடங்கள்! அரசு வேலை கிடைத்தால் சந்தோஷம். அதுவும் விண்ணப்பித்த மூன்று வேலைகளுமே கிடைத்தால் என்ன செய்வீர்கள்? நல்ல சம்பளம், எதிர்கால புரமோஷன் ஆகியவற்றை யோசித்து ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பீர்கள். பீகார்காரர் தனக்கு மூன்று வேலைகளும் தேவை எனத்தேர்ந்தெடுத்து 30 ஆண்டுகள் பணியாற்றி சம்பளம் வாங்கியிருக்கிறார். தற்போது ஆதார் கார்டு கேட்க தடுமாறி மாட்டிக்கொண்டுவிட்டார். இதன் அர்த்தம் அவரைப்பிடித்து விட்டார்கள் என்பதல்ல; தப்பித்து தலைமறைவாகிவிட்டார் என்பதுதான். கிஷன்கன்ச் பகுதியில் கட்டுமானத்துறை உதவிப் பொறியாளராக வேலை பார்த்த சுரேஷ் ராம்தான் இத்தகைய வேலையைப் பார்த்த திறமைசாலி. 1988 ஆம் ஆண்டு பாட்னாவில் ஜூனியர் பொறியாளராக பணிக்குச் சேர்ந்தார் ராம். பின்னர்தான் நீராதாரத்துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணி வாய்ப்பு கிடைத்தது. அனைத்தையும் ஆண்டவனே கொடுத்தான் என வாங்கிப்போட்டுக்கொண்டவர், அத்தனைக்குமான சம்பளம், பதவி உயர்வு என அனைத்தையும் பெற்றிருக்கிறார். அப்போதுதான் நிதிதொடர்பான பணிக்கான அவரது பணி, சம்பளம், ஆதார் கேட்க தயங்கியவர் பின்னர் தலைமறைவாகியிருக்கிறார்

எஸ்கேப் அனிமல்ஸ்!

படம்
அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த வனவிலங்கு காப்பகத்திலிருந்து இரண்டு சிங்கம் , ஒரு கரடி , ஒரு ஜாகுவார் தப்பித்து சென்று பின்னர் பிடிபட்டன . இதுபோல வரலாற்றில் முன்னர் ஏதேனும் நடந்துள்ளதா ? தப்பிய குரங்குகள் ! 1935  ஆம் ஆண்டு 170 குரங்குகள் (rhesus) லாங் ஐலேண்ட் தீவிலுள்ள விலங்கு பூங்காவிலிருந்து திடீரென தப்பின . ஊழியரின் கவனக்குறைவே இதற்கு காரணம் . கூட்டமாக சென்ற குரங்குகள் மனிதர்களைப் போலவே ரயிலை நிறுத்தச் சொல்லி மறியல் செய்தன . தடுமாறிய போலீஸ் , உள்ளூர் மக்களின் உதவியைக் கோரியது . சுதந்திர நீச்சல் ! 2012 ஆம் ஆண்டு ஜப்பானின் அக்வாரியம் ஒன்றிலிருந்து தப்பிய பென்குயினை 82 நாட்களாக அக்வாரிய ஊழியர்கள் தேடியும் கிடைக்கவேயில்லை . பின்னர் டோக்கியோ கடற்புரத்தில் பிடிபட்ட பென்குயின் நன்றாக மீன் உணவுகளை தின்று ஜம்மென்று இருந்தது கண்டு பலரும் ஷாக்காகி போனார்கள் . இறைச்சியாவேனா நான் ? அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரிலிருந்த இறைச்சிக்கடையில் காளை ஒன்று தில்லாக தப்பித்து ஓடிவிட்டது . உள்ளூர் பூங்கா ஒன்றில் ஜாலியாக புல்மேய்ந்து ரெஸ்ட் எடுத்த காளையை பின்னர் போலீசார்

ஜாலி பிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! சில்லறை டார்ச்சர் ! சீனாவின் புடியன் நகரிலுள பிஎம்டபிள்யூ டீலர் ஆபீஸ் மாலை திடீரென மூடப்பட்டுவிட்டது பலருக்கும் ஷாக் . காரணம் சீனரின் கார் வாங்கும் ஆசைதான் . காரில் விலையான 11 ஆயிரம் டாலர்களை பத்து பெட்டிகளில் சில்லறையாக கொண்டுவந்துவிட்டார் . கடை ஊழியர்கள் ஷட்டரை இறக்கி , கைகளில் ரத்தம் கசிய சில்லறைகளை எண்ணியிருக்கிறார்கள் . அதிபர் இல்லாத கரன்சி ! பிலிப்பைன்ஸ் சென்ட்ரல் பேங்க் , புதிதாக அச்சிட்ட 100 பெசோ கரன்சி நோட்டுக்களை திரும்ப பெற உள்ளது . ஏன் ? அதிபர் மானுவேல் ரோக்ஸாஸின் முகம் நோட்டின் பிரிண்டிங்கில் மிஸ்ஸானதே காரணம் . இதனை இணையத்தில் எர்லா அன்னே என்ற பெண் பதிவிட்டு பிலிப்பைன்ஸ் அரசின் மானத்தை வாங்கிவிட்டார் . காக்பிட்டில் பறவை ! அமெரிக்காவின் மிச்சிகனிலிருந்து கிளம்பிய ஜார்ஜியா விமானம் வேகமாக கீழிறங்கும் சூழ்நிலை . பாமா ?, கடத்தலா ? ம்ஹூம் காக்பிட்டில் பறவை என்ட்ரியானதுதான் காரணம் . மீண்டும் டெட்ராய்டில் கீழிறக்கப்பட்டு உள்நுழைந்த ஹம்மிங்பேர்ட்டை விரட்டி விமானத்தை ஸ்டார்ட் செய்து பறந்திருக்கிறார்கள் . தடைக்கு எதிராக தீவு ! நிய