மூன்று வேலைகளில் முன்னேறிய அரசு ஊழியர் - பீகார் பரிதாபம்
ஆஹா!
மூன்று வேலையில் முப்பது வருடங்கள்!
அரசு வேலை கிடைத்தால் சந்தோஷம். அதுவும் விண்ணப்பித்த மூன்று வேலைகளுமே கிடைத்தால் என்ன செய்வீர்கள்? நல்ல சம்பளம், எதிர்கால புரமோஷன் ஆகியவற்றை யோசித்து ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
பீகார்காரர் தனக்கு மூன்று வேலைகளும் தேவை எனத்தேர்ந்தெடுத்து 30 ஆண்டுகள் பணியாற்றி சம்பளம் வாங்கியிருக்கிறார். தற்போது ஆதார் கார்டு கேட்க தடுமாறி மாட்டிக்கொண்டுவிட்டார். இதன் அர்த்தம் அவரைப்பிடித்து விட்டார்கள் என்பதல்ல; தப்பித்து தலைமறைவாகிவிட்டார் என்பதுதான்.
கிஷன்கன்ச் பகுதியில் கட்டுமானத்துறை உதவிப் பொறியாளராக வேலை பார்த்த சுரேஷ் ராம்தான் இத்தகைய வேலையைப் பார்த்த திறமைசாலி. 1988 ஆம் ஆண்டு பாட்னாவில் ஜூனியர் பொறியாளராக பணிக்குச் சேர்ந்தார் ராம். பின்னர்தான் நீராதாரத்துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணி வாய்ப்பு கிடைத்தது. அனைத்தையும் ஆண்டவனே கொடுத்தான் என வாங்கிப்போட்டுக்கொண்டவர், அத்தனைக்குமான சம்பளம், பதவி உயர்வு என அனைத்தையும் பெற்றிருக்கிறார். அப்போதுதான் நிதிதொடர்பான பணிக்கான அவரது பணி, சம்பளம், ஆதார் கேட்க தயங்கியவர் பின்னர் தலைமறைவாகியிருக்கிறார். பின்னர்தான் விஷயம் லீக்காகி அரசுக்கு அவமானம் ஆகியுள்ளது.
முதல் தகவல் அறிக்கை பதிவாகி, போலீசார் நிதானமான ராமை தேடத் தொடங்கியுள்ளனர். பிடிச்சிருவாங்கன்னு நம்புவோம்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா