பிட்ஸ் எக்ஸ்ட்ரா - சந்திரயான் 2 புதிய தகவல்கள்!





Image result for chandrayaan 2 launch




பிட்ஸ் - சந்திரயான் 2 


சந்திரயான் 2 விண்கலனில் மூன்று முக்கியப் பகுதிகள் உண்டு. ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகியவையே அவை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்கு அடித்தளமிட்ட டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவாக, லேண்டருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 வுக்கான அல்காரிதத்தை முழுக்க இந்தியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் எழுதி உருவாக்கி உள்ளனர்.
சந்திரயான் 1 போன்று இல்லாமல் சந்திரயான் 2 நிலவின் தரையில் சுமுகமாக இயங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லேண்டர் விக்ரம், ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் பிரக்யான் மூலம் பல்வேறு அறிவியல் சோதனைகள் செய்யப்படவிருக்கின்றன. 

சந்திரயான் 2 இல் செயல்படும் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டு ஆகும். சந்திரயான் 2 நிலவின் தரைப்பரப்பை ஆராய்வதோடு அதன் சூழலையும் ஆராயும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்பிட்டர் வட்டப்பாதையில் நூறு கி.மீ. தள்ளி இருந்தாலும் லேண்டர், ரோவர் செய்யும் சோதனைகளை ரிமோட் முறையில் அறிய முடியும்.

சந்திரயான் 2 வில் உள்ள பல்வேறு ஆய்வுப் பொருட்கள் மூலம், நிலப்பரப்பு, நில அதிர்வு, கனிம வளங்கள், வேதிப்பொருட்கள், மண்ணிலுள்ள இயற்பியல் பண்புகள் ஆகியவற்றை ஆராயவிருக்கின்றனர்.

சந்திரயான் 2 விலுள்ள டியூவல் ஃப்ரீக்வன்சி சிந்தெடிக் அபெர்ச்சர் ரேடார் (Dual Frequency Synthetic Aperture Radar (DFSAR)) மூலம் நிலவின் துருவப் பகுதிகளிலுள்ள நீர் மற்றும் பனிக்கட்டிகளைப் பற்றி ஆராய்வார்கள். இதிலுள்ள  டியுவல் ஃப்ரீக்வன்சி ரேடியோ சயின்ஸ் (DFRS), மூலம் நிலவின் அடுக்குகளிலுள்ள எலக்ட்ரான்களின் அடர்த்தியை அளவிட திட்டமிட்டுள்ளனர்.

சந்திரயான் 2வில், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் நிலவிலுள்ள மெக்னீசியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், டைட்டானியம், இரும்பு, சோடியம் ஆகியவற்றை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். மேலும் சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சையும் இக்கருவி அளவிடுகிறது.

சந்திரயான் 2 விலுள்ள அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி மூலம் நீர் மூலக்கூறுகளை கண்டறியவிருக்கிறார்கள்.


தகவல்: இந்தியா டுடே

பிரபலமான இடுகைகள்