புத்தக அறிமுகம்- இணைய தாக்கம் மொழியை மாற்றியது இப்படித்தான்!




புத்தக அறிமுகம்

இணையத்தால் ஏற்பட்ட தாக்கம்!



36739320. sy475




இணையத்தில் எதுவும் மிகச்சிறியதாக கூறவேண்டும். முதலில் நிறைய பிளாக்குகளில் எழுதியவர்கள் கூட தடுமாறிப்போய், பின் மெல்ல சமூக வலைத்தளத்திற்கு பழகிப்போனார்கள். இணையத்தில் நீளமான செய்திகளிலிருந்து எப்படி மீம்ஸ்களுக்கு மக்கள் பழகினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும். வாங்கிப்படியுங்கள். குறிப்பாக ஆங்கிலமொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கிரெட்சன் எளிமையாக விளக்கியுள்ளார்.

எபோலா ஏற்படுத்திய மரணபயம்!

44526650. sy475






2013-14 தொடங்கி இன்றுவரை எபோலா தாக்குதல் ஏற்படுத்திய அச்சம் பலருக்கும் தீரவில்லை. எப்படி தடுப்பது, மக்களைக் காப்பாற்றுவது என மருத்துவர்கள் தடுமாறிப்போனார்கள். கண்டங்கள் தாண்டி எபோலா எப்படி மக்களைத் தாக்கி வீழ்த்தியது என்று ஆசிரியர் விளக்கியுள்ளார். அதோடு இந்த நூல் ஒருவகையில் எதிர்காலத்தில் நமக்கு ஏற்படும் நோய்களை நாம் எப்படி தடுக்கவேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.



41150422


பெண்களின் உடல்நலம்!

1970களுக்குப்பிறகு பெண்கள் வெறும் குடும்பம் என்று இல்லாமல் பல்வேறு பணிவாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவகையில் அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் தந்தது உண்மைதான். ஆனால் இன்றும் அலுவலகம் சென்றாலும் , செல்லாவிட்டாலும் பெண்களின் உடல்நலம் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறது. அதிலிருந்து மீள்வது எப்படி, என்பது பற்றி விளக்கும் புத்தகம் இது.


42372550



இடம்பெயர்தல்!

ஆசிரியர் மார்க்கரெட் ரெங்கல், தன் சொந்த வாழ்க்கையையும் அவரைச் சூழ்ந்திருந்த சிறுவயது இயற்கைச் சூழலையும் அருமையாக விவரித்து நூலாக எழுதியுள்ளார்.


நன்றி: குட்ரீட்ஸ்