தேக்கத்திற்கு காரணம் வாகன உற்பத்தியாளர்கள்தான்! - ருத்ரதேஜ் விளக்கம்!
நேர்காணல்
ருத்ரதேஜ்
பிஎம்டபிள்யூ இயக்குநர்
உலகளவில் சொகுசு கார்களின் விற்பனை 4 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனை 1 சதவீதமாக உள்ளது. என்னதான் பிரச்னை?
கார் விற்பனை தேக்கம் என்பது அரசு உருவாக்கியதல்ல. கார் உற்பத்தியாளர்களால் உருவானது. ஒரு காரை பயனர் வாங்குகிறார் என்றால் அதில் முதலில் பார்ப்பதாக விலை எனும் அம்சம் இருக்கிறது. குறைந்த விலை என்றால் அது தவறாக சந்தைப்படுத்தப்படுகிறது என்றாகிறது. கார் வாங்குவது என்பது ஒரு வாழ்நாள் சாதனை போல மாற்றி வைத்திருக்கிறார்கள். எங்களுடைய கார்களை வாங்குபவர்கள் விலையை பொருட்டாக கொள்ளாதவர்கள்தான்.
கார் வாங்குபவர்களுக்கான ஊக்கத்தொகை பற்றி தங்கள் கருத்து என்ன?
எங்களுடைய கார்களை வாங்குபவர்களில் 35 சதவீதம் கார்ப்பரேட் ஆட்கள்தான். மீதி 15 சதவீதம் பேர் பிற துறையினர், மக்கள் என வைத்துக்கொள்ளலாம். தற்போது விழாக்காலம் என்பதால் என்பதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எங்களுடைய பிராண்டை மக்கள் மனதில் பதிய வைப்பதே எங்களுக்கு முக்கியம். இப்போது நாங்கள் மற்றொரு போட்டியாளருடன் போட்டியிடப் போவதில்லை. காரணம், அப்படியொரு உறுதியான போட்டியாளர் சிறந்த தயாரிப்பை உருவாக்கியிருந்தால்தான் அது சாத்தியம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனையை அதிகரிப்பதே எங்களது நோக்கம். மியூசிகல் சேர் விளையாட்டு எங்கள் லட்சியமல்ல.
எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஆர்வமாக இருக்கிறீர்களா?
நிச்சயமாக . ஆனால் இந்தியாவில் இன்னும் அதற்கான சூழல் உருவாகவில்லை. அவை உருவாகும்போது பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்களை இங்கேயும் வெளியிடும்.
தேவை குறைவு என்பது சந்தையை பாதிக்காதா?
நாங்கள் மூன்று இடங்களில் எங்கள் கிளைகளை தொடங்கியுள்ளோம். மக்களின் வாங்கும் சக்தி நீங்கள் கூறியதில் நிச்சயம் பெரிய பங்கு வகிப்பது உண்மைதான். ஆனால் அது பெரிய பிரச்னை அல்ல என்றே நினைக்கிறேன்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
ஆங்கிலம் - ராஜேஷ் சந்திரமௌலி - ந ந்தினி சென் குப்தா