சிரியாவில் செயல்பட்ட ரகசிய நூலகம்!
டீன் வோக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எப்படி தன் வாழ்க்கையில் தன் ஆசைகளைத்துரத்தி வென்றார் என்பதே நூலின் மையம்.
கருப்பின அம்மா, ஐரிஷ் கத்தோலிக்க அப்பா இருவரின் காதல் பரிசாக பிறந்தார். பள்ளியில் நண்பர்கள் கிடைக்காமல் அல்லாடி தன் ஆசிரியர் மூலம் ஊக்கம் பெற்று பத்திரிகை பாதையைத் தேர்ந்தெடுத்து வென்ற கதை ஊக்கமூட்டுகிறது.
எபோனி, தி வோக், டீன் வோக் என பத்திரிகைகளில் பெற்ற அனுபவங்கள் உங்களுக்கு உதவக்கூடும்.
தீவிரவாதக்குழுக்களைப் படித்திருப்பீர்கள். புகைப்படங்களை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். அதிலும் பெண்களே உறுப்பினர்களாக இருந்து, பெண்ணே கேங் லீடராக இருந்து வழிநடத்தினால் எப்படி இருக்கும்?
1978-85 காலகட்டத்தில் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட வில்லியம் விரட்டிப்பிடித்த கம்யூனிச தீவிரவாத அமைப்பு பற்றிய நிகழ்வுகளை இந்த நூல் கொண்டுள்ளது. அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்க்கும் சாம பேத தண்ட அமைப்பு இது. நவ.7, 1983 அன்று அமெரிக்க தலைநகரில் வெடிகுண்டு வைக்கும் தீவிரத்துடன் இருந்த அமைப்பு வங்கிக் கொள்ளைகளிலும் தொடர்புடையது. எப்படி வில்லியம் இந்த அமைப்பின் நடவடிக்கைகளைக் கண்டுபிடித்தார் என இந்நூல் விரிவாக விளக்குகிறது.
சிரியாவில் நடைபெற்ற கதை இது. பிபிசி செய்தியாளர் மைக் தாம்சன், 2012 ஆம் ஆண்டு போர் தொடங்கியபோது மாணவர்கள் படிக்கவென தரைக்கு கீழே அமைக்கப்பட்ட ரகசிய நூலகம் பற்றிய ருசிகர செய்தியை இந்த நூல் விவரிக்கிறது. வாய்வழியாக மிகச்சிலர் மட்டுமே பரிமாறிக்கொண்ட தகவல் வழியாக இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வந்த கதை பின்னர் உலகிற்கு தெரிய வந்தது. அது எப்படி என்பதை இந்த நூல் விளக்குகிறது.
நன்றி: kirkusreviews.com