மூளையை கணினியுடன் இணைத்து உணர்ச்சிகளையும் உருவாக்கலாமா?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
நாம் நம்முடைய மூளையை கணினியில் இணைக்கும்போது நம்முடைய உணர்ச்சிகளும் அதில் பதிவாகுமா?
எலன்மஸ்க் ஏற்கனவே தன் எண்ணத்தைச் சொல்லி நியூராலிங்க் எனும் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார். எனவே நிச்சயம் எதிர்காலத்தில் நம்முடைய மூளை ஏதோவொரு கணினியில் இணைக்கப்படும். அப்போது நம் மூளையிலுள்ள கருத்துகள் எண்ணங்கள் உணர்ச்சிகளும் கணினியில் பதிவாகுமா?
மூளையில் நியூரான்கள், கிளியல் செல்கள், ரத்தசெல்கள் இவற்றில் நடக்கும் வேதிவினைகள்தான் நம் எண்ணங்களுக்கு காரணம். ஒருவரின் உடலை விட்டு உயிர் பிரிந்தபின்னரும் கூட அவரின் மூளை மூலம் அவரின் எண்ணங்களை உயிரோடு வைத்திருக்க முடியும். இதனை பின்னர் இன்னொருவரின் உடலோடு கூட பொருத்தமுடியும் என்று வையுங்களேன்.
நினைவில் கொள்ளுங்கள். இயற்கையான மூளையிலிருந்து டிஜிட்டல் பிரதி உருவான பிறகு, இயற்கை மூளை குப்பையில் எறியப்பட்டு விடும். அதுவே உண்மை. அதற்குப்பிறகு மனித உடலை டிஜிட்டல் முறையில் செயற்கையாக நாமே வடிவமைத்துக்கொள்ள முடியும். இதற்கான சாட்சிகளை நாம் விரைவில் பார்க்கத்தான் போகிறோம்.
நன்றி: பிபிசி