வலதுசாரி தீவிரவாதம் அதிகரித்து வருகிறது! - பல்கேரிய ஆய்வாளர் அறிக்கை!






ஆய்வாளர் ரஸ்லன் ட்ரான்


பல்கேரியாவில் வலதுசாரி தீவிரவாதக்குழு தோன்றி செயல்பட்டு வருகிறது. இதுபற்றிய ஆய்வை குளோபல் வாய்ஸ் கட்டுரையாளர் ரஸ்லன் ட்ரான் மற்றும் கிரில் ஆரமோவ் ஆகியோர் இணைந்து செய்து அதனை வெளியிட்டனர். அதுபற்றி அவர்களிடம் பேசினோம்.

நீங்கள் ஆய்வு செய்த இயக்கம் எப்படிப்பட்டது?

பல்கேரிய துருக்கி எல்லையில் செயல்படும் குழு இது. பல்கேரிய தேசிய இயக்கம் (BNO) பற்றியது எங்களது ஆய்வு. 2016 ஆம்ஆண்டு இதுபற்றி குளோபல் வாய்ஸ் வலைத்தளத்தில் கட்டுரை எழுதினேன். அந்த ஆண்டுதான் இக்குழு, அகதிகளை வேட்டையாடுபவர்களாக மாறியது. இவர்களுக்கு ஐரோப்பாவிலுள்ள அனைத்து வலதுசாரி இயக்கங்களுடனும் நல்ல தகவல் தொடர்பு உண்டு. மேலும் இளம் உறுப்பினர்களை ஈர்ப்பதிலும் இவர்கள் நல்ல வேகம் காட்டுகிறார்கள். டென்மார்க், ரோமானியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கேம்புகளை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ரஷ்ய ராணுவம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இவர்களின் செயல்பாடு எத்தகையது?

நாங்கள் அகதிகள் அழிப்பு, இஸ்லாம் மயப்படுத்தல் போன்ற விஷயங்களை இதில் மையப்படுத்தவில்லை. இன்று பல்கேரியாவில் 600 அகதிகள் மட்டுமே உள்ளனர். நான் அகதிகள் குடியேற்றம்  பற்றி பேசியபோது இதுபோன்ற அமைப்பிலுள்ள நண்பர் சிரிக்கத் தொடங்கிவிட்டார். அகதிகள் குடியேற்றம் ஐரோப்பாவில் அதிகம். இதனால் இவர்கள் பயப்படும்படி ஏதும் நடக்காது. ஆனால் இதுபோன்று ஆபத்து என்று உசுப்பி விடுவது சில தகவல்தொடர்புகளை உருவாக்கித் தருகிறது. மக்கள் எளிதில் இதன் மூலம் திசைதிருப்பப்பட்டு விடுகின்றனர். இந்த அமைப்புகள் சிரிய அரசியலமைப்பை நம்புவதில்லை. சிரிய விடுதலைக்காக என்று சொல்லி போராடி வருகின்றன.

பல்கேரிய தேசிய இயக்கத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

இவர்கள் இதுவரை தம் மீது நடவடிக்கை எடுக்கும்படி வன்முறையாக நடந்துகொள்ளவில்லை. இதன்மூலம் பல்கேரிய மக்களுக்கு அந்நியர்களைத் தடுக்கும் காவலர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர். பலரும் இதனை உள்ளூர நம்புகின்றனர். அண்மையில் பர்காஸ் பகுதியில் உக்ரேனியர்கள் சிலரை இவர்கள் அடித்து அச்சுறுத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இவர்களின் பயிற்சி வகுப்புகள் எப்படி நடைபெறுகின்றன?

அதில் புதிய உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், அரசியல் அறிவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதனை ரஷ்ய ராணுவம் கவனிக்கிறது. இவர்கள் உலகம் முழுக்க உள்ள தீவிரவாதி அமைப்புகளுடன் தொடர்புகொண்டுள்ளனர். ஏ.ஆர் 51 எனும் துப்பாக்கி நினைவிருக்கிறதா? ஆஸ்திரேலியாவில் தீவிரவாதி கிறிஸ்தவர்களின் சர்ச்சுகளில் பயன்படுத்தினாரே அதேதான். அதைத்தான் இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. அண்மையில் அமெரிக்காவில் டரன்ட் என்பவர் டெக்சாஸில் தாக்குதல் நடத்தினார். அவர்கள் பல்கேரிய தேசிய இயக்கத்தின் அனுதாபிகளாக இருந்துள்ளது உளவுத்துறை மூலம் தெரிய வந்துள்ளது.

ஆய்வு முடிவில் என்ன தெரிந்துகொண்டீர்கள்?

எங்கள் ஆய்வு பல்கேரியாவுக்கு வெளியில் ஆர்வமாக படிக்கப்பட்டது. ஆனால் இங்கு பெரிய ஆர்வம், வரவேற்பு கிடைக்கவில்லை. ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் பல்கேரிய அமைப்புகளுக்கு உதவுவது சந்தேகத்திற்குரியது. இவர்களின் கருத்தியலும் ஆபத்தானது.

நன்றி: குளோபல் வாய்ஸ் - ஃபிலிப் ஸ்டோஜனோவ்ஸ்கி