கருத்து சொல்றோம் ப்ரோ! - ஆங்கில இந்தியர்கள் அட்டூழியம்- சேட்டன் பகத்!





Community, Forum, Questions, Exclamations, People



பெட்ரோல், டீசல் விலை, மாணவி வல்லுறவு, கள்ள உறவு, அந்நிய செலாவணி கையிருப்பு, புதிய மசோதா, பட்ஜெட் ஆகிய விவகாரங்கள் சூடுபிடிப்பது எங்கு தெரியுமா?

மாநில மொழி ஊடகங்களில் அல்ல; முழுக்க ஆங்கில மீடியத்தில் படித்து ஆங்கிலேய நாவல்களை படித்து அதிலேயே கனவுகண்டு இந்தியாவில் வாழும் ஆட்களின் உலகம்தான் மேற்சொன்ன விவகாரங்களைப் பேசுகிறது. மக்களிடையே கொண்டு செல்கிறது. திரும்பத்திரும்ப அதனைப்பேசி, மக்களின் மனங்களில் பயத்தை புயலை உருவாக்கி வருகிறது. பிற மக்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதையே இவர்கள் மறக்க வைத்துவிடுகிறார்கள்.

ஆங்கிலமொழியில் இயல்பான வசதி என்னவென்றால், எளிதாக உலகோடு தொடர்புகொள்ளமுடியும் என்பதுதான். இதன் விளைவாக, ஆங்கில ஊடகங்கள் எந்த டாபிக்கை எடுத்துப் பேசுகிறார்களோ அதைத்தான் உலகம் கவனிக்கிறது. இந்தியாவில் இப்படி நடக்கிறது என சிஎன்என், பிபிசி முதற்கொண்டு புரிந்துகொண்டு எழுதிவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லுவது கந்தசாமி, பழனிச்சாமி கிடையாது . குறிப்பாக தந்தி போன்ற மாநில சார்பு கொண்ட அரசு சார்பு கொண்ட பத்திரிகைகளில் இதனைப் பார்க்க முடியாது. ஆனால் ஆங்கில இந்தியர்கள் வேற லெவலில் சிந்திப்பவர்கள்.

சாதாரணமாக வேலைக்குச் சென்று மாதம் பத்தாயிரம், பன்னிரண்டாயிரம் சம்பாதிப்பவர்களுக்கு ஜிஎஸ்டி குறித்து என்ன கருத்து இருக்கும்? சோப்பு, ஊதுபத்தி விலை ஏறிருச்சுங்க. ஜிஎஸ்டிதான் காரணம் என உள்ளூர் பத்திரிகையில் படித்ததைச் சொல்லுவார். அப்புறம்? எனக்கேட்டால் உடனே வேலை இருக்குங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். கூடுதலாக ஜனநாயகத்திற்கு ஆற்றும் பணியாக வாக்குப்பதிவுக்கு போய் வரிசையில் நிற்பார். தனக்கு கொடுத்த காசை நினைத்துப் பார்த்து நம்பும் கட்சிக்கு ஓட்டு போடுவார். தினசரி வாழ்க்கையே சிலுவையாக நம் முதுகில் கிடக்க விவாதத்திற்கு நேரம் எங்கே?

பதினெட்டு பேனல்களைத் திறந்து வைத்துக்கொண்டு அதில் சமூக ஆர்வலர்களைத் திரட்டி வைத்து விவாதம் செய்ய தனி சமர்த்து வேண்டும்தான். இவர்கள் யார்? சிபிஎஸ்இ, ஐஜிஎஸ்இயில் படிப்பவர்கள், முழுக்க நகரங்களில் வாழ்பவர்கள், ஹைப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவார்கள், மால்களில் சினிமா பார்ப்பார்கள், இவர்கள்தான் இந்தியாவில் கருத்து யுத்தங்களைச் செய்கிறார்கள்.

டிவியில்தான் பேசவேண்டுமா என்ன? சமூக வலைத்தளங்களில் இன்று இன்டர்நெட் பேக் போடுபவர்கள் யார் வேண்டுமென்றால் கருத்து சொல்கிறார்களே? அப்புறம் என்ன உடனே தேசியவாதம் பேசுபவர்கள், ஷங்கிகள். சுதந்திரக்கருத்து பேசுபவர்கள் விபச்சார ர்கள் என்று கருத்து வரும்படி சண்டை போடுகிறார்கள்.

ஆங்கில இந்தியர்கள் இன்னும் கருத்துகளில் வளர்ச்சி அடையவில்லை. இவர்கள் பாகிஸ்தானியர்களை வெளியேறச்சொல்லுகிறார்கள். கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள். குறிப்பாக, தீவிரவாதத்தை ஆக்ரோஷமாக எதிர்க்கவேண்டும் என கோஷமிடுகின்றனர். மனிதநேயம் பேசுபவர்களை அந்நிய நாட்டு கைக்கூலிகள் என்று திட்டுவதும் இவர்கள்தான். அதேசமயம் இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும்போது இவர்கள் செய்த அடாத செயல் எனக்குப் பிடிக்கவில்லை. பாகிஸ்தானிய நடிகர் இந்திப்படத்தில் நடிக்க கூடாது என்று விவாதத்தைக் கிளப்பி புயலை உருவாக்கி வந்தனர். அது தவறு என்று கூறுபவர்களின் மீது அவதூறு சேறை வாரி இறைத்தனர்.

அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டதுதான் கருத்து சுதந்திரமும் கூட. அதைத்தாண்டி கும்பல் வன்முறைக்கு மக்களைத் தூண்டுவதும் குற்றம்தானே. அதையும் கருத்து சுதந்திரம் கொண்டே செய்வது தவறு அல்லவா? ஒருவரின் கழுத்தில் கத்தி வைத்து கருத்து கேட்பதற்கு சமமாக டிவிகளில் கருத்துகளைக் கேட்டு பகிர்கின்றனர். இது ஊடகங்களில் ஒற்றை சர்வாதிகார குரலை வலுப்படுத்துவது போல உள்ளது. கருத்து சொல்வதில் நீங்களும் நானும் வெல்வதை விட இந்தியா வெல்லவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

சேட்டன்பகத்தின் இந்தியா பாசிட்டிவ் நூலைத் தழுவியது. 

படம் - பிக்ஸாபே