இடுகைகள்

Science லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் கணிப்பாளர்!

படம்
சூழல் கணிப்பாளர் ! தென் ஆப்பிரிக்காவில் தண்ணீரை அரசு ரேஷன் முறையில் விநியோகிக்கத் தொடங்கியதை முன்கூட்டியே கணித்தவர் கொலம்பியா சூழலியல் கழகத்தின் இயக்குநரான லிசா கோடார்ட் . மாலி , பர்கினா ஃபாஸோ , நைகர் ஆகிய பகுதியிலிருந்த மக்கள் நீர்தட்டுப்பாட்டால் இடம்பெயர்ந்து வருகின்றனர் . " முந்தைய ஆண்டுகளைவிட இப்பகுதிகளில் வெப்பநிலையின் தன்மை மாறியுள்ளது . கடல் வெப்பநிலையும் மெல்ல மாறிவருகிறது " என்கிறார் லிசா . பல்வேறு இயற்கை பேரழிவுகளை கணிப்பதற்கான கட்டமைப்புகளை நிறுவுவதற்காக பல்வேறு நாடுகளில் பல்வேறு அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்துள்ளார் லிசா . அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுவதைப் பற்றி கவலைப்படாமல் எல் நினோ , லா நினோ பற்றி லிசா ஆய்வுகள் செய்வதை பிற ஆய்வு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் விமர்சிக்கின்றனர் . " சிறந்த ஆராய்ச்சி மாடல்களிலும் குறைகள் உண்டு . நாங்கள் ஆராய்ச்சி செய்யும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு ஆராய்ச்சியின் முடிவுகள் உதவுகின்றன ." என்கிறார் லிசா .  

Science Bits!

படம்
நன்றி திருவிழா ! 1924 ஆம் ஆண்டு Macy என்ற கடையின் விரிவாக்கத்தை கொண்டாடுவதற்காக மன்ஹாட்டன் நகரில் தொடங்கப்பட்ட விழாவே நன்றித்திருவிழா . விழாவில் முதலில் கடை ஊழியர்கள் , நடிகர் , நடிகைகள் பங்கேற்றனர் .Allied Patriotic Societies அமைப்பு இவ்விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது . 1927 ஆம் ஆண்டிலிருந்து கேரக்டர் பலூன்கள் விழாவில் பறக்கவிடப்படுகின்றன . இதற்கு Balloonatics என்று பெயர் . 1942-1944 ஆம் முதலாம் உலகப்போர் தொடங்கியதால் , ரப்பர் மற்று ஹீலியம் வாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட பேரணி நிறுத்திவைக்கப்பட்டது . பேரணியில் 35 முறை உருவாக்கப்பட்ட பலூன் கேரக்டரின் பெயர் Snoopy. 2016 ஆம் ஆண்டில் ஸ்நூப்பிக்கு பதில் சார்லஸ் ப்ரௌன் மாற்றப்பட்டது . பரேடு முடிந்த அடுத்த 15 வது நிமிடம் ஹீலியம் பலூன்கள் செவன் அவென்யூவில் காற்று பிடுங்கப்பட்டு , அடுத்த ஆண்டு பேரணிக்காக பத்திரப்படுத்தப்படுகின்றன .     2 ஜப்பானில் நீல விளக்கு ! இந்தியாவில் ட்ராஃபிக் விளக்குகள் பச்சை , மஞ்சள் , சிவப்பு என டிசைன் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது . ஆனால் ஜப்பானில் சிவப்புக்கு பதில் நீலநிறம