இடுகைகள்

ரஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகனின் கொள்கைக்காக தன்னையே அர்ப்பணிக்கிற தாய்! - தாய் - மார்க்சிம் கார்க்கி

படம்
மாதிரிப்படம் தாய்  மார்க்சிம் கார்க்கி தொ.சி. ரகுநாதன் ரஷ்யாவில் மன்னருக்கு எதிராக கலகம் செய்யும் தொழிலாளர்களின் கதை. இதில் முக்கியமான பாத்திரங்களாக பாவெல், அவனது அம்மா பெலகேயா நீலவ்னா ஆகியோர் உள்ளனர்.  நீலவ்னாவுக்கு நடக்கும் திருமணமே எதிர்பாராத விபத்தாக அவளது சொல்லில் வெளிப்படுகிறது. அதற்குப் பிறகும் அடி, உதை என வாழ்கிறாள். குழந்தை பிறந்தாலும் அவளது வாழ்க்கை பெரிய மாற்றங்களின்றி வலியோடுதான் இருக்கிறது. பாவெல் அவனது அப்பா குடிநோயால் இறந்தபிறகு ஆலை வேலைக்கு செல்கிறான். பிறரைப் போல குடிக்காமல் வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் வாங்கிய நூல்களை படித்துக்கொண்டிருக்கிறான். இது அவனது அம்மாவுக்கு முதலில் பெருமையாக இருந்தாலும் பின்னர் ஏதோ பிரச்னையாக தோன்றுகிறது.  பாவெல் அடிக்கடி வெளியே கிளம்பிவிட்டு தாமதமாக வீடு வருகிறான். சில நாட்களில் வீட்டுக்கு வருவதில்லை. அவன் எங்கு செல்கிறான் என்பதை நீலவ்னா அறியும்போது அதிர்கிறாள். நாட்டை ஆளும் ஜார் மன்னருக்கு எதிரான சோஷலிச அணியில் மகன் சேர்ந்துவிட்டான். கட்சியில் சேர்ந்து படிப்பது, எழுதுவது, பேரணிகளை நடத்துவது என சென்றுகொண்டிருக்கிறான்.  நீல