இடுகைகள்

மைதானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மிகப்பெரும் கிரிக்கெட் மைதானங்கள்

படம்
            மிகப்பெரும் கிரிக்கெட் மைதானங்கள் என்எம் கிரிக்கெட் மைதானம் அகமதாபாத், இந்தியா 1982ஆம்ஆண்டு திறக்கப்பட்டது. ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் பேர் அமர்ந்து விளையாட்டைக் காணலாம். தொடக்கத்தில் இதன் பெயர், மோட்டெரா என பெயர் வைக்கப்பட்டது. பிறகு வாழும் பரமாத்மாவான அரசியல்வாதி பெயருக்கு மாற்றப்பட்ட பெருமைக்குரிய மைதானம். 2023ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி, இந்த மைதானத்தில் நடைபெற்றது. ஈடன் கார்டன் கோல்கத்தா, இந்தியா 1864ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொலோசியத்திற்கு சவால்விடும் அளவுக்கு பெரியது. ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். 1987ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி, 2016ஆம்ஆண்டு டி20 இறுதிப்போட்டி ஆகியவை நடைபெற்றன. எஸ்விஎன் சர்வதேச மைதானம் ராய்ப்பூர், இ்ந்தியா 2008ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சத்தீஸ்கரில் உள்ள இம்மைதானத்தில் அறுபத்தைந்தாயிரம் பேர் உட்காரலாம். 2023ஆம் ஆண்டு இந்தியாவின் ஐம்பது கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. க்ரீன்ஃபீல்ட் மைதானம் திருவனந்தபுரம், இந்தியா 2015ஆம்...

திறமையான வீரர்களுக்கு ஓய்வு அவசியம் தேவை! - கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

படம்
  ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் நேர்காணல் இந்தியாவுக்கு விளையாட வந்துள்ள ஆஸ்திரேலிய அணிகளில் தற்போதைய அணி, இதுவரை வந்து விளையாடியதில் மிகவும் பலவீனமான அணியாக உள்ளதா? எப்படி சொல்கிறீர்கள்? முன்னர், இந்தியாவில் விளையாடுவதற்கு வந்த ஆஸி. அணியைப் பார்த்தாலே வேறுபாடு தெரியும். அதற்காக முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னே போகவேண்டாம். எனக்குத் தெரிந்து இப்போது வந்து விளையாடும் அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது இங்கு நான் கூறுவது திறமையைப் பற்றியல்ல. அவர்களின் மனநிலையைப் பற்றி… முந்தைய அணி வீரர்களைப் போல இவர்களால் களத்தில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த அணி, ஆஸியைப் போல இல்லை. நாங்கள் விளையாடிய ஆஸி. அணியைப் போல இல்லை என்று கூறுகிறேன். அணியில் என்ன போதாமை இருக்கிறது என கூறுகிறீர்களா?ஆ ஆஸி அணி, எப்போதும் ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் வருவதற்கு முன்னரே பல்வேறு திட்டங்களைத் தீட்டி வைத்திருப்பார்கள். விளையாடும் நாட்டின் தட்பவெப்பநிலை பற்றிய தீர்க்கமான அறிவு ஆஸி அணிக்கு உண்டு. இதனால்தான் அவர்கள் பிற அணிகளை விட அதிக வெற்றிபெற்றவர்களாக இருக்...

ஏழை மாணவர்களுக்கு உதவும் முன்னாள் ராணுவ வீரர்

படம்
  மதுரையைச் சேர்ந்தவர் ஜிஎம் ராமச்சந்திரன். இவர் தேனி பெரியகுளத்தில் தங்கி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ராமச்சந்திரன்,  ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு, வருவாய்த்துறையில் வேலை செய்துள்ளார். பின்னாளில்தான் பழனிக்கு இடம் மாறி வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது காலையில் ஜாக்கிங் பயிற்சிக்கு சென்றார். சாலையில் இவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆன சிலர், ஃபிட்னெஸ் பற்றிய அறிவுரைகளைக் கேட்டிருக்கின்றனர். ஆகா, என  புளகாங்கிதம் அடைந்த ராமசந்திரன் உலகத்திற்கு ஏதாவது சொல்ல நினைத்தார். அதை ஆரோக்கியம் தொடர்பாக அமைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.  ராமச்சந்திரனுக்கு விளையாட்டில்தான் தொடக்கம் முதலே ஆர்வம். இதனால் படிப்பில் சுமாராகவே இருந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதை வைத்துத்தான் 1976ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.  ராமச்சந்திரன் தடகளப் பயிற்சி கொடுப்பவர்கள் எல்லோருமே வறுமையான பின்புலத்தைக் கொண்டவர்கள். இவர்களுக்கு ஓடுவதற்கும், கயிற்றைப் பிடித்து ஏறுவதற்கும், நீளம் ...