மிகப்பெரும் கிரிக்கெட் மைதானங்கள்

 

 

 

 


 

 


மிகப்பெரும் கிரிக்கெட் மைதானங்கள்

என்எம் கிரிக்கெட் மைதானம்
அகமதாபாத், இந்தியா

1982ஆம்ஆண்டு திறக்கப்பட்டது. ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் பேர் அமர்ந்து விளையாட்டைக் காணலாம். தொடக்கத்தில் இதன் பெயர், மோட்டெரா என பெயர் வைக்கப்பட்டது. பிறகு வாழும் பரமாத்மாவான அரசியல்வாதி பெயருக்கு மாற்றப்பட்ட பெருமைக்குரிய மைதானம். 2023ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி, இந்த மைதானத்தில் நடைபெற்றது.

ஈடன் கார்டன்
கோல்கத்தா, இந்தியா

1864ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொலோசியத்திற்கு சவால்விடும் அளவுக்கு பெரியது. ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். 1987ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி, 2016ஆம்ஆண்டு டி20 இறுதிப்போட்டி ஆகியவை நடைபெற்றன.

எஸ்விஎன் சர்வதேச மைதானம்
ராய்ப்பூர், இ்ந்தியா
2008ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சத்தீஸ்கரில் உள்ள இம்மைதானத்தில் அறுபத்தைந்தாயிரம் பேர் உட்காரலாம். 2023ஆம் ஆண்டு இந்தியாவின் ஐம்பது கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இடம்பிடித்தது.

க்ரீன்ஃபீல்ட் மைதானம்
திருவனந்தபுரம், இந்தியா
2015ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஐம்பத்தைந்தாயிரம் பேர் அமர்ந்து போட்டிகளைப் பார்க்கலாம். கரியவட்டம் என்ற நிறுவனம் மைதானத்தை உருவாக்கிக்கொடுத்தது. இந்தியாவின் முதல் டிபிஓடி மைதானம் என பெயர் பெற்றது.

பிஆர்எஸ்ஏவிஇ மைதானம்
லக்னோ, இந்தியா

நாட்டில் ஐந்தாவது சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று. ஐம்பதாயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். 2018ஆம் ஆண்டு இம்மைதானம், அரசியல்வாதி ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டது.

பிராபர்ன் மைதானம்
மும்பை, இந்தியா
1937ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கிளப்பிற்கு சொந்தமான மைதானம். ஐம்பதாயிரம் பேர் அமர்ந்து போட்டிகளைப் பார்க்கலாம். 2006ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2007ஆம் ஆண்டு முதல் டி20 போட்டி ஆகியவை இ்ங்கு நடந்தன.




அடிலெய்ட் ஓவல்
ஆஸ்திரேலியா
1871ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 55, 317 பேர் பார்வையாளர்களாக வந்து அமர்ந்து போட்டிகளைக் காணலாம். அதிகபட்ச பார்வையாளர் எண்ணிக்கையும் இதுதான். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் பேரளவிலான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்தது சாதனை என்கிறார்கள்.

மெல்பர்ன் மைதானம்
ஆஸ்திரேலியா
1853ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஒரு லட்சத்து இருபத்து நான்கு பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளைப் பார்க்கலாம்.  2006ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி, 1956ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்ஸ், 1992,2015 உலக கோப்பை இறுதிப்போட்டி ஆகியவை இந்த மைதானத்தில் நடத்தப்பட்டன. ஜி என பெருமையாக அழைக்கப்படும் மைதானம்.

போர்ப்ஸ் இந்தியா 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்