ஸ்மார்ட் வாட்சுகள், ப்ளுடூ்த் ஸ்பீக்கர்கள் - சந்தைக்குப் புதுசு

 

 

 



 
சந்தைக்குப் புதுசு

ஃபிட்பிட் சார்ஜ் 6

உடலிலுள்ள ரத்தத்தின் ஆக்சிஜன், இசிஜி, தோல் வெப்பம் ஆகியவற்றை சென்சார்கள் மூலம் கண்டுபிடிக்கிறது. கூடவே, ஏராளமான உடற்பயிற்சி நூலகமே உள்ளது. அதை போன் மூலம் அணுகி பயன் பெறலாம். இதில் கூகுள் மேப், கூகுள் வாலட், யூட்யூப் மியூசிக் ஆகிய அம்சங்களும் உண்டு.
விலை 139 பவுண்டுகள்

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2

இந்த வாட்ச் பெரும்பாலும் வெளியில் பரபரப்பாக சுற்றுபவர்களுக்கானது. வாட்சின் பேட்டரி 36 மணி நேரத்திற்கு தாங்குகிறது. பிற ஆப்பிள் வாட்சுகளில் என்ன பார்த்திருப்பீர்களோ அத்தனை விஷயங்களும் அம்சங்களும் அப்படியே இருக்கின்றன. கூடுதலாக மலையேற்றத்திற்கான வரைபடம், காம்பஸ் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக இயங்குகின்றன.

விலை 799 பவுண்டுகள்

ஜப்ரா எலைட் 8 ஆக்டிவ்

தூசு, நீர் ஆகிய எதனாலும் பாதிக்கப்படாத பாடல் கேட்க உதவும் இயர்பட்ஸ். உலகிலேயே கடினமான இயர்பட்ஸ் என்று விளம்பரம் செய்கிறார்கள். பேட்டரி எட்டு மணி நேரம் தாங்குகிறது. விலை 179 பவுண்டுகள்.

போலார் ஹெச்10

இதயத்துடிப்பு, நடக்கும் தப்படி என கணக்கு போடும் ஸ்மார்ட் வாட்சுகள் உலகில் ஏராளம் வந்துவிட்டன. ஆனால், அதையெல்லாம் தாண்டி சற்று தீவிரமாக உடற்பயிற்சி விஷயங்களை கவனிக்க வேண்டும் என நினைப்பவர்கள் போலாரைத் தேர்ந்தெடுக்கலாம். 150 விளையாட்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட செட்டிங்குகளைக் கொண்டிருக்கிறது. உடல்நலம் சார்ந்த பிற கருவிகளோடு ப்ளூடூத் மூலம் இணைத்துப் பயன்படுத்தலாம்.

விலை 86 பவுண்டுகள்.


ஹேப்பி இயர்ஸ்

இயர் பிளக்ஸ். இதை கான்செர்ட்டுகளுக்கென தயாரித்து விற்கிறார்கள். இதை காதில் அணிந்துகொள்ளும்போது, ஒலியை 25டிபி அளவுக்கு குறைக்கிறது. ஆனால், ஒலியின் தரம் குறைவதில்லை. காதில் அதிக ஒலியைக் கேட்பதைக் குறைத்து மனநலத்தை தருகிறது. இதை வாங்கும்போதே நல்ல அடிக்கிற கலரில் வாங்கிக்கொள்வது நல்லது. அப்போதுதான் தொலைந்தால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். விலை 24 பவுண்டுகள்.


நோக்கியா 3210

உலகிலுள்ள மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ 3210 என்ற போனை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஆண்ட்ராய்ட் போன்களில் பெரிய மார்க்கெட் இல்லை. பட்டன் போன்களில் 4ஜி, ப்ளூடூத் சேர்த்து கொடுத்திருக்கிறார்கள். இதனால் முன்னர் பெரிய பலமாக இருந்த பேட்டரியின் தாங்கும் திறன் குறைந்துவிடுகிறது. பொழுதுபோக்க பாம்பு விளையாட்டு உள்ளது. அதை விளையாடி மகிழலாம். வேறு செய்வதற்கு ஏதுமில்லை. போன் பழுதானால், இ குப்பைகளுக்கான இடத்தில் எறிந்துவிட்டு நல்ல போன் கம்பெனியில் வேறு போனை வாங்கிக்கொள்ளுங்கள். வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்றால், அங்கு நோக்கியா நிறுவனத்தை விட மோசமான கொள்ளைக்காரர்கள் இருப்பார்கள். பணத்தை அடித்து பிடுங்குவது நடக்கும். ஜாக்கிரதை. விலை 75 பவுண்டுகள்.

ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்

போஸ்  சவுண்ட்லிங்க் ஃபிளக்ஸ்

ப்ளுடூத் மூலம் இயங்குகிறது. எளிமையாக, குறைந்த எடை கொண்டதாக நீர் உள்ளே புகாததாக சிலிகான் அம்சம் உள்ளதாக உள்ளது. இதை ஆப் மூலம் இயக்கலாம். மூளையுடன் அழகு என்று கூறுவார்களே அந்த வகையில் சேரும். இதில் பாடல்களை கேட்பது சிறப்பாக உள்ளது. இதில், மைக்கும் உள்ளது. விலை 150 பவுண்டுகள்.

ஜேபிஎல் ஃபிளிப் 6

ப்ளுடூத் ஸ்பீக்கர். பெரிய வசதிகளை எதிர்பார்க்க வேண்டாம். பாடல்களைக் கேட்கலாம். ஒலி சிறப்பாக உள்ளது. பனிரெண்டு மணிநேரம் பேட்டரி தாங்குகிறது. வடிவமைப்பு எளிமையாக அழகாக உள்ளது. நீரால் பாதிக்காத வசதியுள்ளது. விலையும் வாங்கும்படியாக 99 பவுண்டுகள் என உள்ளது.

டிரிபிட் ஸ்டோர்ம்பாக்ஸ் மைக்ரோ 2

இதுவும் ப்ளுடூத் ஸ்பீக்கர்தான். பனிரெண்டு மணிநேரம் தாங்குகிறது. நீரால் பாதிப்பு இல்லை. பார்க்க எளிமையாக இருப்பதால், இடத்தை அதிகம் ஆக்கிரமிப்பதில்லை. பாடல்களைக் கேட்கவும் நன்றாக இருக்கிறது. விலை 60 பவுண்டுகள்.

அல்டிமேட் இயர்ஸ் வொண்டர்பூம்
தண்ணீரில் மிதக்கவிட்டுக்கொண்டே பாடல்களை கேட்கலாம். 360 டிகிரியில் இசை உங்களை மகிழ்விக்கும். விலை 70 பவுண்டுகள்.

டி3 இதழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்