சந்தைக்குப் புதுசு - கோ பைலட் வசதிகளைக் கொண்ட ஏஐ லேப்டாப்ஸ்

 

 

 

 

 





 

 ஏஐ லேப்டாப்ஸ்

அடுத்த தலைமுறை ஏஐ என்ற சொல்லை உச்சரிக்காமல் வாழவே முடியாது போல. இன்று தொழில்நுட்ப மாநாடு என்று ஒன்று நடந்தால் அதில் ஏஐ என்ற சொல்லை எண்ணற்ற முறை உச்சரிக்கிறார்கள். முன்னர், கூகுளோடு போட்டியிட முடியாமல் தவித்த மைக்ரோசாஃப்ட் புத்துணர்ச்சி கொண்டிருக்கிறது. ஓப்பன் ஏஐ நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தம், அதன் ஆயுளை சந்தையில் கூட்டியுள்ளது. பெரிதாக கண்டுகொள்ளப்படாத சத்யா நாதெள்ளா, இப்போது டெக் உலகில் மரியாதையுடன் பேசப்பட்டு வருகிறார்.

கணினிசந்தையில் இழந்த மவுசை பெற கோ பைலட் பிளஸ் என்ற தொழில்நுட்பம் பெயரில் மடிக்கணினிகளை, மேசைக் கணினிகளை தயாரித்து விற்கத் தொடங்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இணைய வசதி இருந்தால் போதும், நேரலையில் ஏஐ மூலம் நாற்பது மொழிகளில் ஒரு வார்த்தையை மொழிபெயர்க்க முடியும். அதை ஆடியோவாக கூட கேட்கலாம். கோ கிரியேட்டர் மூலம் கலைப்படைப்புகளை மேம்படுத்திக்கொள்ளலாம்.

அடோப் போட்டோஷாப், டாவின்சி ஆகிய நிறுவனங்களும் ஏஐயை தங்களது மென்பொருளில் இணைத்துக் கொள்ள தொடங்கியுள்ளனர். அவற்றைப் பற்றியும் செய்திகள் விரைவில் வெளியாகும். இப்போது சில மடிக்கணினிகளைப் பார்ப்போம்.

ஏசர் ஸ்விப்ட் 14 ஏஐ

இதில் 75 வாட் பேட்டரி உள்ளது. மைக்ரோசாஃப்டின் சர்ஃபேஸ் கணினியை விட அறுபது சதவீதம் திறன் கொண்டது. இதில் கோ பைலட் வசதி உள்ளது. இருபத்தாறு மணிநேரம் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இதை நீங்கள்தான் பயன்படுத்திவிட்டு கூறவேண்டும். ஏஐ கோ பைலட்வசதியை பயன்படுத்தினால் டச் பேடினால் கல்யாணத்தில் சீரியல் பல்பு எரிவது போல வெளிச்சம் வருகிறது. 1.36 கிலோ எடை. இதை குறைந்த எடை என்று கூறிவிடமுடியாது. ஓசன்கிளாஸ் டச்பேடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம். இது பிளாஸ்டிக் என்பதுதான். 1440 அளவில் வெப்கேம் உள்ளது. எனவே, வீடியோ கால்களை தைரியமாக பேசலாம். விலை 1,199 பவுண்டுகள்.

லெனோவா திங்க்பேட் 14எஸ் 6 ஜெனரேஷன்

கோபைலட் புதிய தொழில்நுட்பம் என்றாலும் கூட அதை வைத்து தொழிலுக்காக பயன்படுத்தும் விதமாக மடிக்கணினிகளை ஒரு நிறுவனம் சிறப்புற வடிவமைத்திருக்கிறது என்றால் அதற்கு லெனோவாவைத்தான் பதிலாக கூறவேண்டும். இதன் கீபோர்ட், டச் பேட், டச் பேட்டில் மவுசிற்கு என தனி பட்டன்கள் என திருப்திகரமாக உள்ளது. இதன் எடை 1.24 கி.கி. 58 வாட் பேட்டரி. 32 ஜிபி ராம். குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ் எலைட் புரோசசர்.

இதில் ஓஎல்இடி இல்லை, திரையில் அதிக துல்லியம் எதிர்பார்க்க முடியாது. விண்டோஸ் 11 புரோவில் இயங்குகிறது. இப்படி எல்லாம் இருந்தாலும் இருக்கும் மடிக்கணினிகளில் சிறப்பாக உள்ளது என திங்க்பேடைக் கூறலாம். விலை 1,800 பவுண்டுகள்

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் புரோ
11வது எடிஷன்

பதிமூன்று அங்குல திரை. 895 கிராம் எடை. இதில் ஹைபிரிட் தன்மை கொண்ட கோபைலட் ஆப்சன் உள்ளது. ஓஎல்இடி திரை கொண்ட கணினி என்றால் விலை கூடுதல். மலிவாக விலை இருக்கவேண்டுமா, எல்சிடி திரையைத் தேர்ந்தெடுக்கலாம். பின்புறத்தில் பத்து எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வெப் காமிரா 1440 பி அளவு கொண்டது. மடிக்கணினியைப் பொறுத்தவரை சில வசதிகள் வேண்டுமானால் அதை பொறுத்து விலை கூடும், குறையும்.
விலை 1549 பவுண்டுகள்.

சாம்சங் கேலக்ஸி புக் 4 எட்ஜ்

இந்த மடிக்கணினியில் இரண்டு வேறுபாடு உள்ளது. ஒன்று பதினான்கு அங்குலத்திரை, மற்றொன்று, பதினாறு அங்குலத்திரை. சிறிய திரையில் விண்டோஸ் 11 உள்ளது. எடை 1.16 கி.கி. 10.9 மி.மி அடர்த்தி கொண்டது. இதைவிட எல்ஜி கிராம் 14 இன்னும் மெல்லியது. இருந்தாலும் செய்த வேலையில் மோசமில்லை, சாம்சங்கை பாராட்டிவிடலாம்.

எப்போதும் போல அமோல்ட் 2எக்ஸ் திரை உள்ளது. எனவே, காட்சிகள் கண்ணைக் கவருகின்றன. நிறைய உலோகங்களை, எளிமையான வடிவமைப்பு என ஆப்பிள் மேக்புக் நினைவுக்கு வருகிறது. மடிக்கணினி, கொரில்லா கிளாஸைக் கொண்டுள்ளது. எனவே, வெளியில் கொண்டு சென்று பணிபுரிந்தாலும் பிரச்னை இல்லை. 16 ஜிபி ராம். குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ் எலைட் புரோசசர். விலை 1,699 பவுண்டுகள்

டி3 ஜூலை 2024




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்