உப்புச்சுவையை உணரும் நாக்கு - எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

 

 

 




அறிவியல் பேச்சு
மிஸ்டர் ரோனி
நாக்கில் எந்த பகுதி உப்புச்சுவையை அறிகிறது?

அனைத்து பகுதிகளுமேதான். சிலர் நாக்கில் குறிப்பிட்ட பகுதி உணவில் உள்ள சில சுவைகளை அறிகிறது என வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். போலிச்செய்திகள் என்பதை உருவாக்க இன்று ஏஐயைக் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். உண்மைக்கு நிரூபணம் தேவை. பொய்க்கு குழப்பமே போதும் அல்லவா? எனவே வதந்திகளை நம்பாதீர்கள். நாக்கில் குழுவாக, குறிப்பிட பகுதியில் சுவையை தனியாக உணரும் சுவை மொட்டுகள் ஏதுமில்லை. அறுசுவைகளை நாக்கில் உள்ள அனைத்து சுவை மொட்டுகளுமே அறிய முடியும். குறிப்பிட்ட பகுதியில் அந்த சுவை தெரிகிறது என நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் ஹல்லுசினேஷன்தான். உடனே சென்று டாக்டர் தசாவதாரத்தைப் பாருங்கள்.

2

எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன?

மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள், பரிணாம வளர்ச்சி ஆய்வாளர்கள் ஆகியோர் ஒரே உயிரினத்திலிருந்து மனிதன், எலி, சி்ம்பன்சி ஆகியோர் உருவாகி பரிணாம வளர்ச்சிப்படி வளர்ந்திருக்க வேண்டும் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மனிதர்களோடு எலி எழுபது தொடங்கி எண்பது மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கலாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எலிக்கும், மனிதனுக்குமான மரபணு ஒற்றுமை எழுபது சதவீதம்.

எலியை ஆய்வகத்தில் கூறுபோட்டு சோதிக்க மேற்சொன்ன ஒற்றுமையும் முக்கிய காரணம். எலி மலிவாக கிடைக்கிறது. அதன் ஆயுள் குறைவு, முக்கியமான அது பாலூட்டி இனம் என்பன இதர காரணங்கள். எலி மட்டுமல்ல சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்கும் கூட மரபணு ஒற்றுமை உண்டு. 0.3 சதவீத டிஎன்ஏ வேறுபாடுதான் உள்ளது.



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்